பசு பாதுகாவலரை சுட்டுக் கொன்ற கும்பல்; அலைபேசியில் பதிவான அதிர்ச்சி காட்சிகள்

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement
போபால்: மத்திய பிரதேசத்தில் காரில் சென்று கொண்டிருந்த விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட பசு பாதுகாவலரை ஒரு கும்பல் வழி மறித்து சுட்டது. பின்னர் காரில் இருந்து அவரை வெளியே இழுத்துப் போட்டு இரும்பு தடியால் தாக்கி கொன்றது. பதறவைக்கும் இக்காட்சிகளை செல்போனில் ஒருவர் படம் பிடித்துள்ளார்.மத்திய பிரதேச விஷ்வ இந்து பரிஷத்தின் பசு பாதுகாப்பு பிரிவின் மாவட்ட தலைவராக ரவி
Madhya Pradesh, mp, bhopal, Cow Vigilante, Killed, Chilling, Murder, Caught On Camera, video, மத்திய பிரதேசம், பசு பாதுகாவலர், சுட்டுக்கொலை, வீடியோ

போபால்: மத்திய பிரதேசத்தில் காரில் சென்று கொண்டிருந்த விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட பசு பாதுகாவலரை ஒரு கும்பல் வழி மறித்து சுட்டது. பின்னர் காரில் இருந்து அவரை வெளியே இழுத்துப் போட்டு இரும்பு தடியால் தாக்கி கொன்றது. பதறவைக்கும் இக்காட்சிகளை செல்போனில் ஒருவர் படம் பிடித்துள்ளார்.

மத்திய பிரதேச விஷ்வ இந்து பரிஷத்தின் பசு பாதுகாப்பு பிரிவின் மாவட்ட தலைவராக ரவி விஷ்வகர்மா இருந்தார். இவர் சனிக்கிழமை ஹோஷங்காபாத்தில் இருந்து நண்பர்கள் இருவருடன் காரில் சென்று கொண்டிருந்த போது, போபாலில் இருந்து 150 கி.மீ தூரத்தில் உள்ள பிபாரியா நகரில் 6 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்துள்ளது. முகத்தை துண்டால் சுற்றிக் கொண்டிருந்த அந்த கும்பல், ரவியின் காரை முதலில் தாக்குகின்றனர். பின்னர் துப்பாக்கியால் ரவியை ஒருவர் சுடுகிறார். அப்போது காரில் உடன் வந்த இருவர் தப்பி ஓடுகின்றனர்.


latest tamil news


நெஞ்சில் குண்டு பாய்ந்த ரவியை வெளியே இழுத்துப்போடும் அந்த கும்பல், இரும்பு தடியை கொண்டு சரமாரியாக அடித்து கொல்கின்றனர். இதனை அவ்வழியாக சரக்கு வாகனத்தில் செல்லும் நபர் ஒருவர் உயிரை பணயம் வைத்து செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி கடும் கண்டனத்தை பெற்றுள்ளது. கொலையாளிகளை உடனடியாக பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. முன்பகை காரணமாக இக்கொலை நடந்ததாகவும், கொலை தொடர்பாக 10 பேர் மீது வழக்கு பதிந்து, தப்பியோடியவர்களை தேடி வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
02-ஜூலை-202008:18:04 IST Report Abuse
Sampath Kumar இது ஒரு drama yaar இதன் பின்னணி என்று தீர விசாரிக்க vaendum
Rate this:
Cancel
தமிழன் என்று சொல்லி  தலை நிமிர்வோம் முற்பகல் செயின் பிற்பகல் விளையும்
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
29-ஜூன்-202010:38:34 IST Report Abuse
dina இந்த பாதக செயலுக்கு எந்த மினாரிட்டி குரூப் பொறுப்பு ஏற்கும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X