வெளி நாடுகளிலிருந்து 347 பேர் மதுரை வருகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெளி நாடுகளிலிருந்து 347 பேர் மதுரை வருகை

Added : ஜூன் 28, 2020
Share

பெருங்குடி:

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து துபாய், மாலத்தீவிற்கு வேலைக்கு சென்றவர்கள் கொரோனா தடை உத்தரவால் தாயகம் திரும்ப இயலவில்லை. தளர்வுகள் அறிவித்ததால் பலர் தமிழகம் திரும்பி வருகின்றனர். நேற்று துபாயிலிருந்து 177 பேர், மாலத்தீவுகளிலிருந்து 170 மதுரை திரும்பினர். அவர்களுக்கு சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்தனர். அவர்கள் தனியார் விடுதிகள், சிறப்பு பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X