தமிழ்நாடு

கொரோனா நோயாளிகளுக்கு 4500 படுக்கைகள் தயார்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

மதுரை:

மதுரை வேளாண் கல்லுாரி கொரோனா தனிமைப்படுத்தும் மையத்தை கலெக்டர் வினய் தலைமையில் அமைச்சர் உதயகுமார் ஆய்வு செய்தார்.அவர் கூறியதாவது: மாநகராட்சியில் 1400 களப்பணியாளர்கள் வீடு வீடாக காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா என ஆய்வு செய்கின்றனர். வெளியிடங்களிலிருந்து வந்த 1477 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. இதில் 553 பேர் குணமடைந்தனர். அரசு மருத்துவமனையில் 1400 படுக்கை வசதிகள் உள்ளன. தவிர கோவிட் மையம், தனியார் மருத்துவமனைகள், தனியார் கல்லுாரிகள் என 4500 படுக்கைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் எம்.பி., வெங்கடேசன் முதல்வருக்கு கடிதம் எழுதுவது போல மக்களிடம் பீதியை ஏற்படுத்துகிறார். அவரிடம் அரசு செய்துள்ள ஏற்பாடுகளை காட்ட தயார். தவறான தகவல்களை பரப்புவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.மாநகராட்சி கமிஷனர் விசாகன், கூடுதல் கலெக்டர் பிரியங்கா, டி.ஆர்.ஓ., செல்வராஜ், ஆர்.டி.ஓ., ரவி, அரசு மருத்துவமனை டீன் சங்குமணி, சுகாதார துணை இயக்குனர் பிரியாராஜ், ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் செல்லத்துரை உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X