பொது செய்தி

தமிழ்நாடு

போர்வெல்களில் குறையும் தண்ணீர்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

பேரையூர்:
பேரையூர் தாலுகாவில் நான்காண்டுகளாக பொய்த்த பருவமழையால் 800 அடிக்கு மேல் 'போர்வெல்' அமைத்தும் தண்ணீர் இன்றி விவசாயிகள் கண்ணீர் விடுகின்றனர்.நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. தண்ணீரை தேடி விவசாயிகள் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தாலுகாவில் ஆயிரக்கணக்கான எக்டேரில் விவசாயம் நடக்கிறது. இங்கு இறவை, மானாவாரி நிலங்கள் உள்ளன. இறவை நிலங்களில் கிணறு மற்றும் போர்வெல்' மூலம் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்யப்படுகிறது. பெரும்பாலான விளைநிலங்களில், 600 அடிக்கு போர்வெல் போடப்பட்டுள்ளனர். நான்காண்டுகளாக பருவமழை பொய்த்ததால், நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்று, விவசாயம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.விவசாயி கண்ணன் கூறியதாவது: 600 அடியில் மூன்று இடங்களில் 'போர்வெல்' அமைத்து ஆறு ஏக்கரில் பயிர்களுக்கு நீர்பாய்ச்சி வந்தேன்.தற்போது 3 போர்வெல்களிலும் தண்ணீர் இல்லை. இதனால் மாற்று இடத்தில் 1000 அடி போர் போட்டும் தண்ணீர் இல்லை என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X