தமிழ்நாடு

மதுரையில் இன்று முழு ஊரடங்கு: மக்களே வெளியில் வராதீர்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement


மதுரை:அதிவேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த மதுரையில் இன்று (ஜூன் 28) தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.காய்கறி, மளிகை கடைகள் கூட திறக்கப்படமாட்டாது. மக்கள் வெளியில் வருவதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.மாநகராட்சி, பரவை பேரூராட்சி, கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஜூன் 23 இரவு 12:00 முதல் ஜூன் 30 இரவு 12:00 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகள் மட்டும் காலை 6:00 முதல் பகல் 2:00 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.ஆனால் கொரோனாவில் தீவிரத்தை உணராமல் மக்கள் வெளியில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி வெளியில் திரிகின்றனர். இந்நிலையில் இன்று இரவு 12:00 மணி வரை எந்த தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு அமலில் இருக்கும். மருந்து, பால் கடைகள் மட்டுமே திறக்க அனுமதியுண்டு. எனவே பொது மக்கள் வெளியில் வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தேவையின்றி வெளியில் வருவோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X