சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூன்றுமாவடி--அய்யர்பங்களா ரோட்டில் ஆக்கிரமிப்புகளால் விபத்துக்கள்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement
 மூன்றுமாவடி--அய்யர்பங்களா ரோட்டில் ஆக்கிரமிப்புகளால் விபத்துக்கள்

மதுரை:மதுரை மூன்றுமாவடி-அய்யர்பங்களா இணைப்பு ரோட்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகளால் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.மாட்டுத்தாவணி - திண்டுக்கல் ரோட்டை இணைக்கும் வகையில் மூன்றுமாவடி, அய்யர்பங்களா, உச்சபரம்புமேடு, ஆனையூர், கூடல்நகர் வழியாக ரூ.10 கோடியில் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. மூன்றுமாவடி முதல் உச்சபரம்புமேடு வரை நான்கு கி.மீ., துாரத்திற்கு பெரியாறு பாசன கால்வாய் இரு புறமும் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. ரோட்டோர மின்கம்பங்களை அகற்றாததால் விபத்துக்கள் நடந்தன. தற்போது ஒரு வழியாக மின்வாரிய அதிகாரிகள் கம்பங்களை மாற்றி அமைத்து வருகின்றனர். இருப்பினும் முக்கிய இடங்களில் மின்கம்பங்கள் அகற்றப்படவில்லை.இந்நிலையில் ரோட்டோர கடைகளுக்கு செல்வோர் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களை கண்டபடி நிறுத்துகின்றனர். வர்த்தக நிறுவனத்தினர் ரோட்டோரங்களை ஆக்கிரமித்துள்ளனர். ரோட்டோர கடைகள் அதிகரித்தபடி உள்ளன. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அமைக்கப்பட்ட இந்த ரோட்டில் நெரிசலுடன் விபத்துக்கள் நடக்கின்றன. இரவு மின் விளக்குகள், வேகத்தடைகள் இல்லாததால் வாகனங்கள் மின்னல் வேகத்தில் பறக்கின்றன. சில வாரங்களுக்கு முன் அதி வேகத்தில் சென்ற கார் பாசன கால்வாயில் புகுந்தது. நெடுஞ்சாலைத்துறையினர் ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, வேகத்தடைகளை அமைத்து, ஒளிரும் ஸ்டிக்கர்களை குறுக்கு ரோடுகள் சந்திக்குமிடங்களில் பதிக்க முன்வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X