பொது செய்தி

இந்தியா

இந்தியாவுடன் யாரும் மோத முடியாது: பிரதமர் மோடி

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவுடன் யாரும் மோத முடியாது. நமது எல்லைகள் காக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.தக்க பதிலடி'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது : நமது எல்லை மற்றும் இறையாண்மையை காப்பதில் இந்தியா கொண்டுள்ள உறுதித்தன்மையை உலகம் பார்த்துள்ளது. லடாக்கில், நமது பகுதியில் அத்துமீறலுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது. லடாக்கில்
இந்தியா, பிரதமர் மோடி, Modi, PM Modi, Narendra Modi, prime minister, india, china, eastern ladakh, border issue, india-china stand off, Mann Ki Baat, Chinese transgression in Ladakh

புதுடில்லி: இந்தியாவுடன் யாரும் மோத முடியாது. நமது எல்லைகள் காக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


தக்க பதிலடி

'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது : நமது எல்லை மற்றும் இறையாண்மையை காப்பதில் இந்தியா கொண்டுள்ள உறுதித்தன்மையை உலகம் பார்த்துள்ளது. லடாக்கில், நமது பகுதியில் அத்துமீறலுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது. லடாக்கில் வீரமரணம் அடைந்த நமது தைரியமிக்க வீரர்களுக்கு தேசம் தலை வணங்குகிறது. அவர்களின் தியாகம் என்றும் நினைவில் கொள்ளப்படும். தங்களது மகன்களை இழந்த குடும்பத்தினர், தங்களது குழந்தைகளை பாதுகாப்பு படையினருக்கு அனுப்ப வேண்டும் என நினைக்கின்றனர்.


தேசம் பெருமிதம்


இந்தியாவுடன் யாரும் மோத முடியாது. நமது எல்லைகள் காக்கப்படும். லடாக் எல்லையில் சீன அத்துமீறலுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்தது. எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பதும், நட்பை வளர்ப்பது எப்படி என்றும் இந்தியாவுக்கு தெரியும் . கண்ணுக்கு கண் என தெரியவந்தால் பதிலடி கொடுக்கவும் தெரியும். வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களை நினைத்து ஒட்டு மொத்த தேசமும் பெருமை கொள்கிறது.


latest tamil news

மேட் இன் இந்தியா பொருட்களை வாங்க வேண்டும்


உள்ளூர் பொருட்களை வாங்கி உள்ளூர் மக்களின் குரலாக இருக்கும் போது, நீங்கள், நாட்டை வலிமையானதாக மாற்றலாம். இதுவும் ஒரு வகையில் தேசத்திற்கு ஆற்றும் சேவை தான். எந்தவொரு துறையாக இருந்தாலும், தேசத்திற்கு சேவையாற்ற ஒரு வாய்ப்பு கிடைக்கும். சுயசார்பை நோக்கி இந்தியா முன்னேறுகிறது மக்கள் ஒத்துழைப்பின்றி எந்த திட்டமும் வெற்றி பெறாது. லடாக்கில் அத்துமீறலுக்கு பின் உள்நாட்டு பொருளையே வாங்க வேண்டும் என நாடு முழுவதும் சிலர் உறுதியேற்றுள்ளனர்.


தன்னிறைவு இந்தியாவே நோக்கம்

பாதுகாப்பு துறையிலும் இந்தியா சுயசார்பு அடைய வேண்டும் என்பது தமிழகத்தை சேர்ந்த மோகன் ராமமூர்த்தி என்பவரது விருப்பம். சுதந்திரத்திற்கு முன்னர், பல நாடுகளை காட்டிலும், பாதுகாப்பு துறையில் நமது நாடு, முன்னிலையில் இருந்தது. ஏராளமான ஆயுத தொழிற்சாலைகள் இருந்தன. பல நாடுகள், நம்மை காட்டிலும் பின்னால் இருந்தன. ஆனால், சுதந்திரத்திற்கு பின்னர், நமது முன்னிலையை முன்னெடுத்து செல்ல முடியவில்லை. தற்போது, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப துறையில் இந்தியா முன்னேறி செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புதுறையில் சுயசார்பு நிலையை நோக்கி இந்தியா செல்கிறது. சுயமரியாதை மற்றும் இறையாண்மையை பாதுகாக்க இந்தியா தீர்மாமனம் கொண்டுள்ளது. தன்னிறைவு இந்தியாவே தேசத்தின் நோக்கம்


வாய்ப்பாக மாறும் சவால்கள்


நம் முன்னர் பல சவால்கள் உள்ளன. ஆனால், சவால்களில் இருந்து நாம் மீண்டு வந்ததற்கான வரலாறுகள் உள்ளன. சவால்களுக்கு பின்னர் நாம் வலிமை மிக்கவர்களாக மாறுகிறோம். இந்த ஆண்டில், கொரோனா வைரஸ் குறித்து அதிகமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு எப்போது நிறைவு பெறும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். சிலர் இந்த ஆண்டு சரியில்லை எனவும், ராசியில்லை எனவும் கூறுகின்றனர். இவ்வாறு அவர்கள் ஏன் கூறுகிறார்கள் என தெரியவில்லை.


மோசமான ஆண்டா?


கடந்த 6 - 7 மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் நம்மை பாதிக்கும் என நாம் நினைத்தது இல்லை. அம்பான் புயல், வெட்டுக்கிளி பாதிப்பு போன்ற பாதிப்பு சவால்களையும் இந்த ஆண்டு சந்தித்தோம். பிரச்னைகள் மற்றும் சவால்கள் வருவதால், இந்த 2020ம் ஆண்டை மோசமான ஆண்டாக நினைக்கிறோம். நான் அவ்வாறு கருதவில்லை. எத்தனை சவால்கள் வந்தாலும், இந்த 2020 ஆண்டுமோசமானதாக இருக்காது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஜூன்-202020:01:36 IST Report Abuse
ஸ்டாலின் :: சீனப் படைகள் எப்போது இந்திய எல்லைக்குள் வந்தது? உளவுத்துறை கண்டறியவில்லையா? முன்னாள் கர்னல் ஆவேசம்
Rate this:
Cancel
S.VELMURUGAN - TIRUCHIRAPPALLI,இந்தியா
28-ஜூன்-202020:01:17 IST Report Abuse
S.VELMURUGAN இந்த 2020 வருடம் இந்தியாவிற்கு நல்ல ஆண்டே. இந்தியாவின் துரோகிகள் யார் ?நண்பர்கள் யார்? என்பதை இந்திய மக்களுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. இந்திய நாட்டிற்கு தன் கைக்கூலிகளுக்கு பின் நின்று தொந்தரவு கொடுத்து வந்த சீனாவை நேருக்கு நேர் கொண்டுவந்திருக்கிறது 2020 ம் ஆண்டு. நோயை கண்டுபிடிச்சாச்சு.இனி அந்நோயை அழிக்க வேண்டியதுதான் வேலை.இந்த ஆண்டு இந்தியர்களுக்கு தேசப்பற்றை அதிகமாக்கி அனைவரையும் ஓரணியில் நிற்க வைத்திருக்கிறது.சீனப் பொருட்களின் மீது இருந்த மோகத்தை உடைத்து நொருங்க வைத்திருக்கிறது.இந்திய பொருட்களின் மீது சகோதர பாசத்தை உருவாக்கியிருக்கிறது 2020 ம் ஆண்டு. எதிரிகளையும் துரோகிகளையும் தர்மத்தின் துணை கொண்டு வீழ்த்துவோம் இந்த 2020 ம் ஆண்டில். வாழ்க பாரதம் வளர்க தேச நலம்
Rate this:
Davamani Arumuga Gounder - Namakkal,இந்தியா
28-ஜூன்-202021:22:45 IST Report Abuse
Davamani Arumuga Gounderஆம், நண்பரே,, 2020 ம் ஆண்டு உண்மையிலேயே தாங்கள் கூறிய வகையில் தேசத்தின் துரோகிகளை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டியுள்ளதுடன்.. அவரகளின் பின்னால் சென்றவர்கள், நின்றவர்கள் அனைவரும் '' நம் பிரதமரின் கரத்தை வலுப்படுத்துவோம், தாய்நாட்டிற்கு ஆதரவாக செயல்படுவோம் '' என்று உறுதிமொழிகளை மோடி அவர்களின் எதிரிகளாக காட்சியளித்த தி.மு.க.வின் ஸ்டாலின், திரிணாமுல் லின் மம்தா உள்ளிட்ட பலரையும் தேசத்திற்கு ஆதரவாக கருத்து கூற வைத்துள்ளது.. விதிவிலக்கு .. சீனத்தின் அடிவருடிகளான காம்ரேட்டுகள்.. இவர்கள் மட்டுமே இப்பொழுது, சீனத்திற்கு உளவு கூறிவரும் காங்கிரஸ் (?) கட்சியின் பின் அணிவகுத்து கச்சைகட்டி நிற்கிறார்கள்....
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
28-ஜூன்-202019:48:49 IST Report Abuse
Raj கொரோனா மூலம் உலகத்தையே சீனா பயமுறுத்தி விட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X