பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை, கொரோனா, மண்டலவாரியாக, பாதிப்பு, ராயபுரம், விதிமீறல், அபராதம், Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, chennai, royapuram

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பில் ராயபுரம் மண்டலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதுவரை அங்கு 7,455 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில், நேற்றுடன் (ஜூன் 26), 51 ஆயிரத்து, 699 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்றுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, குணமடைவோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. அதன்படி, சென்னையில், 31 ஆயிரத்து, 045 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 19 ஆயிரத்து, 877 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 776 பேர் பலியாகியுள்ளனர்.


சென்னையில் மண்டல வாரியாக பாதிப்பு


மண்டல வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதன்படி, அதிகபட்சமாக ராயபுரத்தில், 7,455 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 6,221 பேருக்கும், தேனாம்பேட்டையில் 5,758 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக மணலியில் 868 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news




அபராதம்



latest tamil news



தமிழகத்தில் ஊரடங்கு விதி மீறல் தொடர்பாக ரூ.15.87 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாக தமிழக போலீஸ் தெரிவித்துள்ளது. மேலும், விதிகளை மீறிய 5,64,823 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, 6,90,214 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தடையை மீறி வாகனங்களில் சுற்றிய 7,53,558 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selva - CHENNAI,இந்தியா
28-ஜூன்-202020:14:11 IST Report Abuse
Selva இந்தியாவின் டெல்லி & மகாராஷ்டிரா போல் சென்னையிலும் கண்டோமென்ட் ஏரியா வாகிய தண்டையார்பேட்டை, ராயபுரம் பகுதியில் இன்னும் கேம்ப் போட்டு 100% கோரோனோ காவிட் -19.உறுதி செய்து மக்களை காப்பாற்ற வேண்டுகின்றேன்..இன்னும் கோரோனோ தன் ஆர்வலர்கள் வீடுகளுக்கு எடுத்து சொல்லி -பரிசோதனை உறுதி செய்ய வேண்டும்.. சென்னையில் முதலில் கவனம் தேவை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X