கொரோனா அதிகரிப்பு; பிரசாரத்தை ரத்து செய்தார் அமெரிக்க துணை அதிபர்

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Mike Pence, Cancels, Political Events, Virus Spikes, America, President, Election, US, corona, coronavirus, covid-19, corona cases, corona update, coronavirus update, coronavirus count, corona toll, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, worldwide crisis, அமெரிக்கா, அதிபர், தேர்தல், மைக், பிரசாரம், ரத்து, கொரோனா, அதிகரிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து ஏற்கனவே திட்டமிடப்பட்ட தேர்தல் பிரசாரத்தை துணை அதிபர் மைக் பென்ஸ் ரத்து செய்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை 25 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு 1,25,480 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளாவிய பாதிப்பில் நான்கில் ஒரு பங்கு அமெரிக்காவில் உள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் தான் அங்கு கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது.


latest tamil newsகொரோனா தொற்றுக்கு மத்தியில் அமெரிக்காவில் நவ.,3ம் தேதி நடக்கும் அதிபர் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. குடியரசுக்கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடேன் களத்தில் உள்ளார். ஞாயிறன்று டல்லாஸ் நகரில் உள்ள முதல் பாப்டிஸ்ட் சர்ச்சில் 'சுதந்திர பேரணியை கொண்டாடுங்கள்' என்ற பொது நிகழ்ச்சியில் பென்ஸ் பங்கேற்க இருந்தார். அதனை தொடர்ந்து டெக்சாஸ் கவர்னர் கிரெக் அபோட்டை சந்திப்பதாக இருந்தது. ஆனால் முந்தைய பொது நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.


latest tamil newsசெவ்வாயன்று புளோரிடாவில் வேல்ஸ் ஏரி உள்பட பஸ் சுற்றுப்பயணம், அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த, கிரேட் அமெரிக்கன் கம்பேக் டூர்' என்ற நிகழ்ச்சியும் ஒத்திவைக்கப்பட்டது. மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நேரம் என்பதால் நிகழ்ச்சியை ஒத்திவைத்ததாகவும், விரைவில் நிகழ்ச்சி நடைபெறும் தேதி குறித்து அறிவிப்போம் என டிரம்பின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இதே போல், சரசோட்டா கவுண்டியின் மாநில வளைகுடா கடற்கரையில் பென்ஸின் பிரசார நிகழ்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குடியரசுக்கட்சி ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்தாலும், புளோரிடா, டெக்சாஸ் மற்றும் அரிசோனா மாகாணங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து கள விவரங்களை அறியவுள்ளதாக வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டத்தில் துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
28-ஜூன்-202019:53:50 IST Report Abuse
Raj குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் தோற்பது உறுதி. வீண் பிரசாரம் தேவையில்லை . காரோண இழப்பை சரி செய்ய முயலும் கடைசிக்காலத்தில்
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
28-ஜூன்-202015:59:51 IST Report Abuse
sundarsvpr யுத்தம் வந்தால் மரணம் தவிர்க்க இயலாது என்பதனை உணர்ந்து போராடுவது தர்மம். அதுபோல் தொற்று தோன்றினால் அதன் தாக்கம் உக்கிரமாய் இருக்கும் என்பதனை அறிந்து முடங்கி கிடைக்காமல் தற்காப்புடன் போராடி வெற்றி காணவேண்டும். தொற்று வேகமாய் அமெரிக்காவில் பரவ காரணம் தற்காப்பு முறை சரியாய் கடைபிடிக்காமை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X