பொது செய்தி

தமிழ்நாடு

மாயனூர் கதவணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

கரூர்: கேரளா மாநிலத்தில், தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த, ஐந்து நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ஈரோடு, நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில், காவிரியாற்று பகுதிகளிலும் கணிசமாக மழை பெய்து வருகிறது. இதனால், கரூர் அருகே மாயனூரில் காவிரியாற்றின் குறுக்கே உள்ள கதவணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 9,256 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 9,697 கன அடியாக உயர்ந்தது. கதவணையில், 9,497 கன அடியும், கிளை வாய்க்காலில், 200 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. மழை காரணமாக தண்ணீர் வரத்து உயர்ந்துள்ளதாக பொதுப்பணி துறையினர் தெரிவித்தனர். கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை, அரவக்குறிச்சியில், 2 மி.மீ., மழை, தோகைமலையில், 5 மி.மீ., மழை பெய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X