பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரவல் தடுப்பு ஆய்வு கூட்டம்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

கரூர்: கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. சிறப்பு கண்காணிப்பு அலுவலர் விஜயராஜ்குமார் பேசியதாவது: மாவட்டத்தில், 136 பேர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பூரண குணமடைந்துள்ளனர். தற்போது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 38 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். பிற மாவட்டங்களில் இருந்து வரும் நபர்களை கண்டறிந்து, உடனுக்குடன் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் போதிய அளவில் படுக்கை வசதிகள், மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒத்துழைப்புடன் வெளியூரில் வரும் நபர்களை கண்டறிந்து, உரிய மருத்துவ பரிசோதனைக்குட்படுத்த தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார். கலெக்டர் அன்பழகன், எஸ்.பி., பாண்டியராஜன், டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X