பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறிகளின் விலை விபரம்: முன் அறிவிப்பு திட்டத்தில் ஆய்வு

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

கரூர்: விவசாயிகள் சந்தை முடிவுகளை எடுக்க ஏதுவாக, விலை முன் அறிவிப்பு திட்டத்தில், காய்கறிகளின் விலை விபரம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண் பல்கலை உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் தக்காளி, கத்தரிக்காய் மற்றும் வெண்டைக்காய் அதிகளவில் நுகர்வு செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் அதிக உற்பத்தி, தேவை குறைவு, சந்தை சீர்குலைவால் அவற்றின் விலை, 60 சதவீதம் வரை குறைந்துள்ளது. இந்நிலையில், உற்பத்தி, வரத்து தேவை ஆகியவற்றை கொண்டு விவசாயிகள், சந்தை முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், விவசாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இயங்கி வரும், ஊரக மேம்பாடு ஆய்வு மையம், விலை முன் அறிவிப்பு திட்டம், ஒட்டன்சத்திரம், கோவை, திருச்சி சந்தையில் கடந்த, 12 ஆண்டுகளாக நிலவிய தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய் விலை மற்றும் சந்தை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் வரும் அறுவடை காலமான ஆகஸ்ட் மாதத்தில் தரமான தக்காளி விலை கிலோ, 16 முதல், 18 ரூபாய், கத்தரிக்காய், 20 முதல், 23 ரூபாய் வரை, வெண்டைக்காய், 15 முதல், 17 ரூபாய் வரை இருக்கும். இந்த விலையானது தென்மேற்கு பருவமழை பொழிவை பொறுத்து மாறுபடும். விவசாயிகள் இதன் அடிப்படையில், சந்தை முடிவுகளை எடுக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X