பொது செய்தி

தமிழ்நாடு

ஆடு வளர்ப்பு திட்டம்: விண்ணப்பிக்க அழைப்பு

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

கரூர்: கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஊரக புறக்கடை செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. க.பரமத்தி, அரவக்குறிச்சி, கடவூர், தாந்தோனி, கிருஷ்ணராயபுரம், தோகைமலை ஆகிய ஒன்றியங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஒவ்வொரு ஒன்றியத்திலும், 45 பேர் வீதம் மொத்தம், 270 பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஒவ்வொருவருக்கும் தலா, 5,000 ரூபாய் மதிக்கத்தக்க, 10 பெட்டை ஆடுகளும், 6,000 மதிப்புள்ள, ஒரு கிடா ஆடு (செம்மறி ஆடு அல்லது வெள்ளாடு) வழங்கப்படும். கிடா ஆடுகளை குறைந்த பட்சம் ஓராண்டுக்கும், பெட்டை ஆடுகளை மூன்று ஆண்டுகளுக்கும் விற்கக் கூடாது. சந்தைகளிலோ, ஆடு வளர்ப்போரிடமோ சென்று தரமான ஆடுகளை தேர்வு செய்து வாங்க வேண்டும். இதற்கு, கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி, விண்ணப்பங்களை அளிக்கலாம். இவ்வாறு, கரூர் கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X