பொது செய்தி

தமிழ்நாடு

சுக்காலியூர் - தண்ணீர்பந்தல் சாலை பணி: கிடப்பிலுள்ள திட்டத்தை விரைந்து முடிக்க கோரிக்கை

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement
கரூர்: கரூர் அருகே, சுக்காலியூரில் இருந்து, கோவை சாலை தண்ணீர் பந்தல் வரை, புதிய சாலை அமைக்கும் பணியை துவக்க வேண்டும், என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.மாநிலத்தின் மைய பகுதியான கரூரில், ஜவுளி தொழில், கொசுவலை உற்பத்தி, பஸ் பாடி கட்டும் தொழில், கல் குவாரி, மணல் குவாரி தொழில்களால், வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் சென்று வருகின்றன. கன்னியாகுமரியில் இருந்து, வாரணாசியை

கரூர்: கரூர் அருகே, சுக்காலியூரில் இருந்து, கோவை சாலை தண்ணீர் பந்தல் வரை, புதிய சாலை அமைக்கும் பணியை துவக்க வேண்டும், என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாநிலத்தின் மைய பகுதியான கரூரில், ஜவுளி தொழில், கொசுவலை உற்பத்தி, பஸ் பாடி கட்டும் தொழில், கல் குவாரி, மணல் குவாரி தொழில்களால், வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் சென்று வருகின்றன. கன்னியாகுமரியில் இருந்து, வாரணாசியை இணைக்கும் சாலை, நாகப்பட்டினத்தில் இருந்து திருச்சி வழியாக கோவையை இணைக்கும் சாலை, கரூர் வழியாக செல்கிறது. இந்த சாலைகள், ஏதாவது ஒரு பகுதியில் கடந்து செல்லாமல், கரூர் அருகே சுக்காலியூரில் சந்தித்து, அதே சாலையில் பயணித்து, திருகாம்புலியூரில் பிரிந்து செல்லும் வகையில் உள்ளன. இதனால், சுக்காலியூரில் இருந்து திருகாம்புலியூர் வரை, புறவழிச்சாலையில் ஐந்து கிலோ மீட்டர் தூரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, சுக்காலியூரில் இருந்து கருப்பம்பாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி வழியாக தாராபுரம் செல்லும் சாலை, தண்ணீர்பந்தல் வரை புதிய புறவழிச்சாலை அமைக்க, 2013ல் போடப்பட்ட திட்டம் கிடப்பில் உள்ளது.

இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறியதாவது: இரண்டு பெரும் தேசிய நெடுஞ்சாலை இணையும் சுக்காலியூரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், கரூர் நகருக்கு பெரும் சோதனை ஏற்படுகிறது. இதை தவிர்க்க, சுக்காலியூர் - தண்ணீர்பந்தல் வழியாக புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, கிராம பஞ்சாயத்துகளிலும் ஒப்புதல் பெறப்பட்டது. சுக்காலியூரில் இருந்து தண்ணீர்பந்தலுக்கு சாலை அமைக்கப்பட்டால், திருச்சி, மதுரையில் இருந்து கோவை செல்லும் வாகனங்கள், கரூர் நகரம் திருகாம்புலியூர் செல்வதை தவிர்க்க முடியும். மேலும், 11 கிலோ மீட்டர் தூரம், பயண நேரம் மற்றும் எரிபொருள் மிச்சமாகும். இந்த சாலையில், விஸ்வநாதபுரி - அப்பிபாளையம் இடையே அமராவதி ஆற்றில் பாலம் கட்டப்படுவதால், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். சுக்காலியூர் - தண்ணீர்பந்தல் வரை அமைக்கப்படும் சாலை, கருப்பம்பாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி உள்ளிட்ட பல கிராம பஞ்சாயத்து பகுதிகள் வழியாக செல்கிறது. இதனால், கிராம பொருளாதாரம் உயரும். கரூர் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் குறையும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X