காவிரி ஆற்றில் நீர்வரத்து: மீன்பிடி தொழில் பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காவிரி ஆற்றில் நீர்வரத்து: மீன்பிடி தொழில் பாதிப்பு

Added : ஜூன் 28, 2020
Share
பள்ளிபாளையம்: ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், பள்ளிபாளையத்தில் மீன்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் அருகே, ஓடப்பள்ளி நீர்த்தேக்கத்தில் ஜிலேபி, கட்லா, லோகு, ஆறா உள்பட பல வகையான மீன்கள் உள்ளன. தினமும் ஏராளமான மீனவர்கள், பரிசல்களில் சென்று, வலை போட்டு மீன்களை பிடித்து வருவர். ஜிலேபி மீனுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது.இதனால் மீன் பிடிப்பு

பள்ளிபாளையம்: ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், பள்ளிபாளையத்தில் மீன்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் அருகே, ஓடப்பள்ளி நீர்த்தேக்கத்தில் ஜிலேபி, கட்லா, லோகு, ஆறா உள்பட பல வகையான மீன்கள் உள்ளன. தினமும் ஏராளமான மீனவர்கள், பரிசல்களில் சென்று, வலை போட்டு மீன்களை பிடித்து வருவர். ஜிலேபி மீனுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது.இதனால் மீன் பிடிப்பு என்பது இந்த பகுதியில் தொடர்ந்து நடக்கும். கடந்த நான்கு மாதங்களாக ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவாக இருந்ததால், மீன் பிடிப்பு தீவிரமாக இருந்தது. தற்போது பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும், நீர்த்தேக்கத்திலும் அதிகளவு தண்ணீர் உள்ளது. இதனால் மீன் பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. பரிசல்கள் ஆற்றோரத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X