பொது செய்தி

தமிழ்நாடு

திறன்களை மேம்படுத்த தொழிற்பயிற்சி: தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

நாமக்கல்: மத்திய அரசுடன் இணைந்து, உலக வங்கி பங்களிப்புடன், சென்னை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, சென்னை மூலம், 'ஸ்டிரைவ்' என்ற திட்டம், நாமக்கல் மாவட்டத்தில், தொழில் பழகுனர் பயிற்சியுடன் கூடிய தொழிற்பயிற்சிகளின் திறன்களை மேம்படுத்த அமல்படுத்தப்பட உள்ளது. இம்மாவட்டத்தில், புரிந்துணர்வு மூலம், ஒருங்கிணைந்த முன்னிலை தொழிற் நிறுவனங்கள், தொழிற் சங்கங்கள், தொழிற் சாலைகள் இண்டஸ்ட்ரி கிளஸ்டர் ஆக கருதப்படும், ஓர் இண்டஸ்ட்ரி கிளஸ்டருக்கு, ஒரு கோடி ரூபாய் வரை, தொழிற்பயிற்சி தொடர்பான பயிற்சிகள், பயிற்சி கட்டட பராமரிப்பு, கருவிகள், தளவாடங்கள் கொள்முதல் போன்ற, மேம்பாட்டு பணிகளுக்கு அரசால் வழங்கப்பட உள்ளது. இந்த உலக வங்கி திட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ள ஒருங்கிணைந்த தொழிற்நிறுவனங்கள், விண்ணப்பம், விளக்கக் கையேடு மற்றும் காணொலி ஆகியவற்றை, ''http://dgt.gov.in/strive' என்ற இணையதளத்தில் இருந்து பெறலாம். விபரங்களுக்கு, 04286 - 222235 என்ற எண்ணிலோ, உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தையை தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி, ஜூலை, 30. இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X