ஈரோட்டிற்கு பணிக்கு செல்லும் நபர்கள் குறித்து கணக்கெடுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோட்டிற்கு பணிக்கு செல்லும் நபர்கள் குறித்து கணக்கெடுப்பு

Added : ஜூன் 28, 2020
Share

பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில் இருந்து ஈரோட்டிற்கும், பிற மாவட்டங்களுக்கும் வேலைக்கு செல்வோர் குறித்து கணக்கெடுப்பு நடக்கிறது.
நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் எல்லை பகுதியாக பள்ளிபாளையம் காவிரி ஆற்றுப்பாலம் உள்ளது. இதன் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பள்ளிபாளையம் நாமக்கல் மாவட்டத்தில் இருந்தாலும், ஜவுளி, வியாபாரம், வர்த்தகம், மருத்துவமனை, காய்கறி, மருந்து, மாத்திரை வாங்குதல் என, அனைத்தும் தேவைகளுக்கும் மக்கள் ஈரோட்டிற்கு செல்கின்றனர். அதேபோல், ஏராளமானோர் வேலைக்கும் சென்று வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கு உள்ளே நுழைய, இ-பாஸ் பெற வேண்டும். ஈரோடு சோதனைச்சாவடியில் இ - பாஸ் இருந்தால் தான் அனுமதிக்கின்றனர். இதனால், பள்ளிபாளையம் பகுதியில் இருந்து சென்றவர்கள் திரும்பி வந்து விடுகின்றனர். கடந்த ஓரிரு நாட்களாக, காவேரி, கரட்டாங்காடு, முனியப்பன்நகர், வசந்தநகர் மற்றும் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில், பேரூராட்சி பணியாளர்கள் வீடுதோறும் சென்று ஈரோடு மற்றும் பிற மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்வோர் குறித்து கணக்கெடுத்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X