பொது செய்தி

தமிழ்நாடு

நாணயமிக்க மாவட்டம் நாமக்கல்: அமைச்சர் தங்கமணி பெருமிதம்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: ''மற்ற மாவட்டங்களை விட, கடனை வட்டியுடன் செலுத்தும் நாணயமிக்க மாவட்டமாக நாமக்கல் உள்ளது,'' என, அமைச்சர் தங்கமணி பேசினார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம், ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம், தனிநபர் தொழில் முனைவோர்களுக்கான நடைமுறை மூலதன நிதி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான, கோவிட் - 19, சிறப்பு நிதி வழங்கும் விழா, பள்ளிபாளையத்தில் நடந்தது. கலெக்டர் மெகராஜ் தலைமை வகித்தார். அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர், பயனாளிகளுக்கு சிறப்பு நிதி வழங்கினர். அமைச்சர் தங்கமணி பேசியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் ஆரம்பிக்கப்பட்ட மகளிர் குழுவை சேர்ந்தவர்கள், கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பும் குறைவாக உள்ள காரணத்தினால், போதிய வருமானம் இல்லை. அவர்களுக்கு, தனி நிதி ஒதுக்கி கடன் உதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஆரம்பித்துள்ளார். மற்ற மாவட்டங்களை காட்டிலும், வாங்கிய கடனை வட்டியோடு திருப்பி செலுத்துகிற நாணயமிக்க மாவட்டமாக நாமக்கல் உள்ளது. தனியாரிடம் கடன் வாங்கும்போது அதிக வட்டி இருக்கும். இங்கு குறைந்த வட்டியில் தரப்படுகிறது. இதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில், பள்ளிபாளையம் நகர்மன்ற முன்னாள் தலைவர் வெள்ளிங்கிரி, மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் சுப்ரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X