பொது செய்தி

தமிழ்நாடு

தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டுகள்: ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்த ஆலோசனை

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், தென்னைப்பயிர், 8,851 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மோகனூர், கபிலர்மலை, பரமத்தி, சேந்தமங்கலம், எருமப்பட்டி, நாமகிரிப்பேட்டை ஆகிய வட்டாரங்களில், அதிகமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தென்னை சாகுபடியில், காண்டாமிருக வண்டுகள் தாக்குதல், ஆண்டு முழுவதும் இருந்தாலும், ஜூன் முதல், செப்., வரை அதிகமாக காணப்படும். நடவு செய்யப்பட்ட தென்னை முதல் வளர்ந்த அனைத்து வயது தென்னை மரங்களையும், வண்டுகள் தாக்கி சேதம் விளைவிக்கும். தென்னையின் உச்சியில் விரிவடையாத குருத்துப்பகுதியில் துளையிட்டு, மரத்தின் உள்ளே சென்று வளரும் மொட்டு பகுதியை மென்று விடும். எஞ்சிய குருத்து விரியும் போது, தென்னை மட்டை முக்கோண வடிவில், சீராக கத்திரியால் வெட்டியது போல் தோற்றமளிக்கும். குருத்துப்பகுதியை மென்றபின் மீதியாகும் மரச்சக்கையை, உள்ளே சென்ற துவாரம் மூலம் அடிமட்டையின் இடுக்குகளில் இருந்து வெளியே தள்ளுகிறது. முட்டைகள் மற்றும் புழுக்கள் எருக்குழிகளில் காணப்படும். விவசாயிகள், தோப்பை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தாக்கப்பட்ட மடிந்துபோன மரங்களை, உடனே அகற்றி அழித்துவிட வேண்டும். எருக்குழிகளில் உள்ள வண்டின் முட்டைகள், புழுக்கள், கூட்டுப்புழுக்களை சேகரித்து அழிக்க வேண்டும். இரவு நேரங்களில், விளக்குப் பொறியை தோப்பில் வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம். ரைனோலூர் இனக்கவர்ச்சி பொறியை, ?ஹக்டேருக்கு, ஐந்து வீதம் வைத்து, வண்டுகளை அதிகளவில் கவர்ந்து அழிக்கலாம். மேலும், வேப்பங்கொட்டை தூளையும், மணலையும், 1:2 என்ற விகிதத்தில் கலந்து, மரம் ஒன்றுக்கு, 150 கிராம் என்ற அளவில் குருத்தில் இட வேண்டும். ஒரு மண்பானையில், ஐந்து லிட்டர் நீருடன், ஒரு கிலோ ஆமணக்கு புண்ணாக்கு சேர்ந்த கலவையை, தோப்பில் வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம். மழைக் காலங்களில், 'மெட்டாரைசியம் அனிசோபிலே' என்ற பச்சைமஸ்கார்டைன் பூஞ்சையை, தண்ணீரில் கலந்து, எருக்குழியில் தெளிப்பதால், வண்டுகளின் இளம் புழுக்களை அழிக்கலாம். மாவட்ட விவசாயிகள், தென்னை மரங்களை தாக்கும் வண்டுகளை, ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்த வேண்டும். விபரங்களுக்கு, அருகில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு, வேளாண் இணை இயக்குனர் அசோகன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X