தமிழ்நாடு

மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு: சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளால் அதிர்ச்சி

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நோய் பரவுதலை கட்டுப்படுத்த, மக்கள் மத்தியில் ஒத்துழைப்பு இல்லாததுடன், சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளால், சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை, 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாக, மாநிலம் முழுவதும், ஐந்து கட்டமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும், சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில், கடந்த, 23 வரை, 91 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், ஒரு லாரி டிரைவர் பலியானார். நேற்று முன்தினம், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் உள்பட, ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை கட்டுப்படுத்துவதற்கு மருந்து கண்டுபிடிக்காத நிலையில், விழிப்புணர்வுடன் இருப்பதும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தலும் மட்டுமே, கொரோனா பரவுதலை தடுக்க முடியும். ஆனால், மக்கள் போதிய விழிப்புணர்வு அடையவில்லை. காரணம், பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும், இருப்பதை, மாவட்டம் முழுவதும் காணமுடிகிறது. குறிப்பாக, மளிகை, காய்கறி, வாரச்சந்தை ஆகியவற்றில், மக்கள் இன்று வரை, சமூக இடைவெளியை பின்பற்றவில்லை. கூட்டமாக நின்று, பொருட்களை வாங்குவதில் குறியாக இருக்கின்றனர். கடை உரிமையாளர்களும், சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்துவது கிடையாது. ஒரு சில கடைக்காரர்கள், தங்களுக்கு விற்பனையானால் சரி என்ற நிலையில் காணப்படுகின்றனர். பொருட்களுடன், கொரோனாவையும் சேர்த்து விற்பனை செய்து வருகின்றனர். அத்தகைய கடைக்காரர்கள் மீது, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, கொரோனா தொற்று பரவுதலை கட்டுப்படுத்த முடியும்.

இதுகுறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் வெள்ளையன் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், வணிகர் சங்கங்கள் கேட்டுக் கொண்டதால், மாலை, 5:00 மணி வரை, கடைகளை அடைக்க, கலெக்டர் மெகராஜ் அறிவுறுத்தினார். ஆனால், ஒரு சில கடைகள், நீண்ட நேரம் விற்பனை செய்து வருவதாக புகார் தெரிவிக்கின்றனர். மேலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் கடை உரிமையாளர்கள், விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள் மீது, மாவட்ட நிர்வாகம் எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும், சங்கம் துணை நிற்காது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X