பொது செய்தி

தமிழ்நாடு

லாரி டிரைவர் உள்பட 3 பேருக்கு கொரோனா

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

நாமக்கல்: மாவட்டத்தில், மூன்று பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், ஏப்., 1 முதல், இதுவரை, 97 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், லாரி டிரைவர் ஒருவர் இறந்தார். இந்நிலையில், மோகனூரை சேர்ந்த, 48 வயது லாரி டிரைவர், கடந்த, ஒரு மாதமாக, பொள்ளாட்சி, கோவையில் பணியாற்றி வந்தார். அவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதேபோல், திருச்செங்கோட்டை சேர்ந்த, 58 வயது பெண், ஈரோடு அடுத்த பெருந்துறையில், தன் மகள் வீட்டில் வசித்து வந்தார். மேலும், நாமக்கல்லை சேர்ந்த, 22 வயது இளம் பெண், ஆறு மாதங்களாக கோவையில் தங்கியுள்ளார். அவர்கள் இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில், தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, அவர்கள், கோவை, பெருந்துறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதன் மூலம், நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 100ஐ தொட்டது. 'கொரோனா தொற்று பாதிப்பு, 100ஆக இருந்தாலும், அதில், ஐந்து பேர், வேறு மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதையடுத்து, மாவட்டத்தில் பாதிப்பு, 95தான்' என, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X