பொது செய்தி

தமிழ்நாடு

கக்கன் பிறந்தநாள் விழா

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையம் நாராயண நகரில், விடியல் ஆரம்பம்' அமைப்பு சார்பில், கக்கன், 112வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அமைப்பாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். கக்கனின் திருவுருவப்படத்திற்கு திரைப்பட இயக்குனர் சந்தோஷ் மலர் மாலை அணிவித்து, மரியாதையை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மாணவ, மாணவியருக்கு ஓவியம், பேச்சு போட்டி வைக்கப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் கார்த்தி, தீனதயாளன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X