நிதி நிறுவனம் நெருக்கடி: தொழிலாளி தற்கொலை முயற்சி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிதி நிறுவனம் நெருக்கடி: தொழிலாளி தற்கொலை முயற்சி

Added : ஜூன் 28, 2020
Share

வெண்ணந்தூர்: வெண்ணந்தூர் அருகே, தனியார் நிதி நிறுவனத்தின் நெருக்கடியால் மருத்துவ மாணவரின் தந்தை தற்கொலைக்கு முயன்றார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே, நெ.3 குமாரபாளையத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கலைமணி, 48. இவருடைய மகன், சிதம்பரம் மருத்துவ கல்லூரியில் படித்துவருகிறார். மகனின் மருத்துவப் படிப்பிற்காக, மல்லூர் பகுதியிலுள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அதிக வட்டிக்கு பணம் பெற்றுள்ளார். தற்போது, கொரோனா ஊரடங்கு உள்ளதால், உணவுக்கே வழியில்லாமல் கலைமணி சிரமப்பட்டுள்ளார். இதனால், குறிப்பிட்ட தேதியில் வட்டியை செலுத்த முடியாததால், நிதி நிறுவனத்தினர் கலைமணியை மிரட்டியதாக கூறப்படுகிறது. மனமுடைந்தவர், நேற்று காலை விஷம் குடித்தார். மேலும், 'தன்னோட இந்த நிலைமைக்கு காரணம் அதிக வட்டி கேட்டு மிரட்டிய நிதிறுவனம் தான்' என, வீடியோ பதிந்து, வாட்ஸ்ஆப்பில் அனுப்பி விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கலைமணியை உறவினர்கள் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் அடிப்படையில், நிதி நிறுவனத்தை சேர்ந்த பூபதி, 42, என்பவரை, வெண்ணந்தூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X