பொது செய்தி

தமிழ்நாடு

தற்போது பள்ளிகள் திறப்பு இல்லை: செங்கோட்டையன்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

நாமக்கல்: ''தமிழகத்தில், தற்போதுள்ள சூழ்நிலையில், பள்ளிகள் திறப்பது சாத்தியக்கூறாக இருக்காது,'' என, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், நிருபர்களிடம் கூறியதாவது: இப்போது இருக்கின்ற சூழ்நிலையில், பள்ளிகள் திறப்பது சாத்தியக்கூறாக இருக்காது. அதே நேரத்தில், சூழ்நிலை மாறுகிறபோது, எப்போது பள்ளிகள் துவங்கலாம் என்பதை, கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள், அமைச்சர்கள் ஆகியோரிடம் கலந்து பேசி, அதற்கு பின், முதல்வர் நடவடிக்கை மேற்கொள்வார். முதல்வரிடம் ஒப்புதல் பெற்றபின், ஆன்லைன் கல்வி குறித்து அறிவிக்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

தொடர்ந்து, சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா கூறியதாவது: கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள இந்த காலகட்டத்தில், 13 லட்சத்து, 35 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு, கொரோனா நிவாரண நிதியாக, தலா, 1,000 ரூபாய் வழங்க, முதல்வர் உத்தரவிட்டார். நாமக்கல் மாவட்டத்தில், 24 ஆயிரத்து, 449 மாற்றுத்திறனாளிகள், இத்திட்டத்தில் பயன்பெற உள்ளனர். மாற்றுத்திறனாளிகளை அடையாளம் கண்டு, தேசிய அடையாள அட்டை அனைவருக்கும் கிடைக்கும்படி செய்வது மட்டும் இன்றி, நேரடியாக வீட்டுக்கு சென்று, 1,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X