அசுரவேக வாகனங்களால் விபத்துகள் அதிகரிப்பு| Dinamalar

அசுரவேக வாகனங்களால் விபத்துகள் அதிகரிப்பு

Added : ஜூன் 28, 2020
Share

எலச்சிபாளையம்: வேலகவுண்டம்பட்டியில் அசுர வேக வாகனங்களால், விபத்துகள் அதிகரித்துள்ளன. எலச்சிபாளையம் ஒன்றியம், வேலகவுண்டம்பட்டியில் இருந்து, திருச்செங்கோடு செல்லும் நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான இருசக்கர, கனரக, இலகுரக வாகனங்கள் சென்று வருகின்றன. சுற்றுவட்டார பகுதிகளுக்கு மக்கள் பணிக்கும், மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கும் செல்கின்றனர். காலை, மாலை நேரங்களில் பீக் ஹவரில், அதிக ஒலியை எழுப்பிக்கொண்டு, அசுர வேகத்தில் வாகனங்கள் செல்கின்றன. இதனால், ஆட்களோ, கால்நடைகளோ எதிரே வந்தால், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துகள் ஏற்படுகின்றன. இப்பகுதியில், வேகத்தடை அமைக்கக்கோரி, மக்கள் பலமுறை அதிகாரிகளிடத்தில் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. எனவே, இங்கு வேகத்தடை அமைத்து, எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X