தாழ்வாக செல்லும் ஒயர்களால் அச்சம்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

எலச்சிபாளையம்: மங்களம் பகுதியில், தாழ்வாக செல்லும் மின் ஒயர்களால், விபத்து அச்சம் ஏற்பட்டுள்ளது. மல்லசமுத்திரம் அருகே, மங்களம் கிராமத்தில் இருந்து, பாறக்காடு அருந்ததியர்தெரு செல்லும் சாலை வழியாக தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் சாலையின் நடுவே ஒரு கம்பத்தில் இருந்து மற்றொரு கம்பத்திற்கு மின்சார ஒயர்கள் தாழ்வான நிலையில் சென்று கொண்டுள்ளன. இதனால், ஒயர்களில் கனரக வாகனங்கள் உரசி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மின்ஒயர்களை உயரமாக செல்லும் வகையில் மாற்ற, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X