பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மின்னலாய் பரவும் கொரோனா; இன்றும் 3500ஐ தாண்டுகிறது?

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் இன்றும் (ஜூன் 28) கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பல மாவட்டங்களில் பெருமளவு அதிகரித்ததால், தொடர்ந்து 3வது நாளாக ஒரே நாளில் 3,500 பாதிப்பை தாண்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவுவதால் பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று (ஜூன் 27) இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Tamilnadu, Corona Cases, Increase, COVID-19, coronavirus, corona, coronavirus outbreak, covid-19 pandemic, corona spread, tamil nadu, tn news, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்றும் (ஜூன் 28) கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பல மாவட்டங்களில் பெருமளவு அதிகரித்ததால், தொடர்ந்து 3வது நாளாக ஒரே நாளில் 3,500 பாதிப்பை தாண்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவுவதால் பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று (ஜூன் 27) இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், தமிழகத்தில் மொத்த பாதிப்பும் 78,335 ஆக அதிகரித்தது. இன்றும் பல மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து 3 நாட்களாக 3,500 என்ற நிலையை கடக்க இருக்கிறது.


latest tamil news


இன்று மதுரை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2,003 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டில் இன்று மேலும் 162 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 5073 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், திருவள்ளூரில் மேலும் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலூரில் 88 பேரும், கடலூரில் 35 பேரும், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள பலசரக்கு கடை ஒன்றில் பணிபுரிந்த 17 பேரும் இன்று புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
28-ஜூன்-202017:09:02 IST Report Abuse
Sampath Kumar இந்த நியூஸியை உங்க ஜீயார்கிட்ட காட்டுங்க
Rate this:
Cancel
raj -  ( Posted via: Dinamalar Android App )
28-ஜூன்-202016:21:41 IST Report Abuse
raj 8 கோடி மக்கள் தொகை இருக்கும் நாட்டில் எப்படி சமூக இடைவெளி பின்பற்ற முடியும்.... உதாரணமாக பள்ளி கல்லூரிகள் இயங்க ஆரம்பித்தால் சமூக இடைவெளி 100 சதம் பின்பற்ற முடியாது
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
28-ஜூன்-202015:45:22 IST Report Abuse
sundarsvpr பல தொற்றுகள் தோன்றி மறைந்துள்ளன. உச்ச கட்டத்தை அடைந்த பிறகு தான் மறைந்துள்ளது. குறையும் நேரத்தில் மருந்து கிடைக்கும். கொரோனாவிற்கு பயந்து வீட்டில் முடங்குவது ஒரு பயனும் இல்லை. பயமே பரவலுக்கு காரணமாய் இருக்கலாம். முக கவசம் கைக்கு உறை சமூக இடைவெளி கடைபிடித்தால் ஊரடங்கு தேவையில்லை. இவைகளை கடைபிடிக்காதவர்களை கண்காணா இடத்திற்கு அனுப்பினால் போதும் கொரோனா மாயமாகிவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X