வீடு வீடாக கொரோனா சோதனை; ம.பி., முதல்வர்

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Kill Corona drive, Door To Door survey, Madhya Pradesh, July1, Drive, Survey, coronavirus, corona, covid-19, coronavirus outbreak, covid-19 pandemic, corona news, india, corona in MP,  கில் கொரோனா, மத்திய பிரதேசம், ஜூலை1, வீடு வீடாக, சோதனை

போபால்: ஜூலை 1 முதல் ‛கில் கொரோனா' பிரசாரத்தின் கீழ் வீடு வீடாக கொரோனா சோதனைகளும், கணக்கெடுப்பும் நடத்தப்படும் என ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் இதுவரை 12,965 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 550 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஜூலை 1ம் தேதி முதல் ‛கில் கொரோனா' (Kill Corona) என்ற பிரசாரத்தை தொடங்க உள்ளதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.


latest tamil news


இது குறித்து அவர் கூறியதாவது: ஜூலை 1 முதல் தொடங்கவுள்ள ‛கில் கொரோனா' பிரசாரத்தின் கீழ், வீடு வீடாக நோய் குறித்த சோதனைகளும் கணக்கெடுப்பும் நடத்தப்படும். 15 நாள் பிரசாரத்தில், தினமும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை என 2.5 லட்சம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படும். நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 58.1 ஆக இருக்கும் போது, மாநிலத்தில் 76.9 சதவீதம் பேர் குணமடைந்து தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
28-ஜூன்-202018:22:13 IST Report Abuse
Visu Iyer சோதனை செய்யும் பொது இல்லை என்று சொல்பவர்களுக்கு சோதனை முடிந்த பிறகு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா.. இல்லையா..? இருக்கிறது என்றால் இந்தத் சோதனை எதற்கு..? இல்லை என்றால்.. அதை மக்களே செய்து கொள்வார்களே.. கோ கொரநா.. போய் இப்போ கில் கொரநா.. தமிழ்நாட்டில் ரோட்டில் பணம் செலவழித்து எழுதி வைத்தால் போதும்.. கொரநா வந்து படித்து விட்டு போயிடும் என்று சொல்றாங்க.. ஆக... பணம் செலவு செய்ய நிறையா திட்டம் வைத்து இருக்கிறார்கள் என்று புரிகிறது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X