சாத்தான்குளம் சம்பவம்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு போனில் ரஜினி ஆறுதல்| Rajinikanth condoles death of father-son duo in Thoothukudi | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாத்தான்குளம் சம்பவம்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு போனில் ரஜினி ஆறுதல்

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (8)
Share
JusticeforJayarajAndFenix, Rajini, Rajinikanth, ரஜினி, ரஜினிகாந்த், Jayaraj, bennix, actor, politician, tamil nadu, tn news, condolences, Thoothukudi, police, Sathankulam

சென்னை : சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் விற்பனை கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரின் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு சமயத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து கடையைத் திறந்து வைத்ததாக கைது செய்யப்பட்டனர். கடந்த 19ஆம் தேதி போலீசால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் கோவில்பட்டி சிறையிலேயே மர்ம மரணம் அடைந்தனர். காவல்துறையினர் அடித்ததில் அவர்கள் உயிரிழந்தார்கள் என சொல்லப்பட்ட இந்த இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது..

சமூக ஆர்வலர்கள், திரைப்படத் துறையினர், என பல்வேறு தரப்பினரும் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து வருவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். நடிகர்கள் கமல், ஜெயம் ரவி, விஷால், சூர்யா, இயக்குனர் ஹரி என திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். அதேசமயம் ரஜினிகாந்த் இந்த விஷயத்தில் இதுவரை தனது கருத்தை வெளிப்படுத்தாதது குறித்து விமர்சனங்களும் எழுந்தன.


latest tamil news
இந்நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஜினி, அவர்களிடம் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.. இந்த தகவலை ரஜினியின் மக்கள் தொடர்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X