பொது செய்தி

இந்தியா

கொரோனா கட்டுப்பாட்டு விதி மீறி கல்யாணம்: மணமகனின் தந்தைக்கு ரூ 6,26,500 அபராதம்

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020
Share
Advertisement
corona, rule, violation, fine, rajasthan, wedding, lockdown violation, coronavirus, corona, covid-19, coronavirus outbreak, covid-19 pandemic, Rajasthan man,  கொரோனா, கட்டுப்பாடு, விதிமீறல், திருமணம், அபராதம்

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா நகரில் கொரோனா கட்டுப்பாட்டு விதியை மீறி நடந்த கல்யாணத்தில் மணமகனின் தந்தைக்கு ரூ 6,26,500 அபராதம் விதிக்கப்பட்டது.

அம்மாநிலத்தின் பில்வாரா நகரில் 50 விருந்தினர்களுடன் மகனின் திருமணத்தை நடத்திக் கொள்ள கீசுலால் ரதி என்பவருக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. ஆனால், விதிமுறைகளை மீறி திருமண நிகழ்ச்சியில் 250க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். திருமணத்திற்கு வந்தவர்களில் 15 பேருக்கு கொரோனா இருப்பதும் உறுதியானது. இதனால் ஏற்பட்ட தொற்றினால் மணமகனின் தாத்தா உயிரிழந்துள்ளார். மேலும் 58 பேர் தனிமைக் காவலில் வைக்கப்பட்டனர்.


latest tamil news



திருமணம் நடத்தியவர்களின் அலட்சியத்தால் மாவட்ட நிர்வாகத்திற்கு தனிமை வார்டு அமைத்தல், சோதனை, உணவு என ஏற்பட்ட செலவுகள் கணக்கிடப்பட்டது. செலவின் மொத்த தொகையான ரூ 6,26,500 மணமகனின் தந்தைக்கு அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த தொகையினை 3 நாட்களுக்குள் செலுத்தும் மாவட்ட நிர்வாகம் மணமகனின் தந்தைக்கு கெடு விதித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X