அரசியலில் யஷ்வந்த் சின்ஹா 'ரீஎன்ட்ரி'; பீகார் தேர்தலில் போட்டியிடுகிறார்

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement

பாட்னா: கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் அரசியலிலிருந்தும், பா.ஜ.,விலிருந்தும் விலகுவதாக அறிவித்த யஷ்வந்த் சின்ஹா, புது கட்சி துவங்கி பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.



latest tamil news



பா.ஜ.,வில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த முன்னாள் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சருமான, யஷ்வந்த் சின்ஹா, கட்சிக்கு எதிராக போர்க் கொடி துாக்கினார். பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடியை, கடந்த தேர்தலில் அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், ஓரங்கட்டப்பட்டதால் 2018 ஏப்., மாதம் கட்சியிலிருந்து விலகினார். அதனால், கட்சிக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும், விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.


latest tamil news


இந்நிலையில், இந்ந ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கும் பீஹார் சட்டசபை தேர்தலில், புதுக்கட்சி துவங்கி போட்டியிடப் போவதாக யஷ்வந்த் சின்ஹா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நிதிஷ் தலைமையிலான தே.ஜ., கூட்டணி ஆட்சியால் பீஹார் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. தற்போதைய மோசமான நிலையை பார்த்து மீண்டும் அரசியலுக்கு வர நான் முடிவு எடுத்துள்ளேன். விரைவில் கட்சி துவங்கி பெயர் அறிவிப்பேன். பீஹாரை முன்னேற்ற எனது கட்சி கடுமையாக உழைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
04-ஜூலை-202014:02:34 IST Report Abuse
Sridhar தேர்தலில் நின்று ஒரு வோட்டுகூட வாங்கமுடியாதவர்களுக்கு தேர்தல் கமிஷன் ஒரு பெரிய அபராதம் விதிக்கவேண்டும். வெறும் டெபாசிட் பறிமுதல் தானே என்று பல தருதலைகள் உள்ளே நுழைவதை தடுக்க உதவியாக இருக்கும். நம்ம ஊரிலும் நிறைய மக்களுக்கு நீதி கிடைக்கும்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
29-ஜூன்-202012:28:37 IST Report Abuse
Bhaskaran பொழுதுபோகவில்லை போலும் மேலும் சேர்த்துவைத்த காசு நிறைய இருக்கோ
Rate this:
Cancel
Hari - chennai,இந்தியா
29-ஜூன்-202009:48:46 IST Report Abuse
Hari இதென்ன முதியோர் இல்லமா என்ன நாடு நல்லா இருக்கணும் ,ஒத்து .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X