ரஷ்யாவில் புதிதாக 6,791 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

மாஸ்கோ : ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இன்று புதிதாக 6,791 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. ரஷ்யாவில் தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்து 3 வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவின் பாதிப்புகளை குறைக்க மாஸ்கோ உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அதிபர் புதின் பல்வேறு கட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று புதிதாக 6,791 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். ரஷ்யாவின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,34,437 ஆக உயர்ந்தது. கடந்த 24 மணிநேரத்தில் 104 பேர் பலியாகினர். இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 9,073 ஆக அதிகரித்தது.


latest tamil news



மேலும் ஒரே நாளில் நாட்டில் 5,735 பேர் குணமடைந்தனர். நாட்டில் இதுவரை நோய் பாதிப்புகளில் இருந்து 3,99,087 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மாஸ்கோ நகரில் ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X