ஆந்திராவில் புதிதாக 813 பேருக்கு கொரோனா| AP reports 813 new COVID-19 cases | Dinamalar

ஆந்திராவில் புதிதாக 813 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020
Share

அமராவதி : ஆந்திராவில் கொரோனா தொற்றால் புதிதாக 813 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 12 பேர் பலியாகினர் என அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆந்திராவில் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆந்திராவில் நோய் தொற்றுக்கு அதிகபட்ச பாதிப்பாக இன்று 813 பேர் பாதிக்கப் பட்டது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. மாநிலத்தின் மொத்த பாதிப்புகளின்எண்ணிக்கை 13,098 ஆக உயர்ந்தது. நேற்று 796 பேர் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் புதிதாக 12 பேர் பலியாகினர். இதையொட்டி, மாநிலத்தின் மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 169 ஆக உயர்ந்தது.


latest tamil news



ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 25,778 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. மாநிலத்தில் தற்போது வரை 8,41,860 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இன்று 401 பேர் குணமடைந்தனர். நோய் தொற்றுக்கு ஆந்திராவில் இதுவரை 5,908 பேர் குணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது 7,021 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக பலியானவர்களில், 6 பேர் கர்னூல், 5 பேர் கிருஷ்ணா மாவட்டத்தையும், ஒருவர் மேற்கு கோதாவரியையும் சேர்ந்தவர்கள் ஆவர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X