மதுரை கொரோனா பாதித்த முதியவர் தற்கொலை முயற்சி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரை கொரோனா பாதித்த முதியவர் தற்கொலை முயற்சி

Added : ஜூன் 28, 2020
Share

திருப்பரங்குன்றம்: மதுரையில் கொரோனா பாதித்த முதியவர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரயில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக இங்கு அனுமதிக்கப்பட்டிருந்தார் இந்நிலையில் அந்த முதியர் தற்கொலை முயற்சியாக கல்லூரியின் மாடியில் இருந்து கீழே குதித்து உள்ளார். உடனடியாக அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே கல்லூரியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என கூறி அங்கு தங்கியிருப்போர் திடீர் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீஸ் கமிஷனர் டேவிட்சன் ஆசிர்வாதம் உதவி கலெக்டர் பிரியங்கா உள்ளிட்டோர் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதி அளித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X