பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா ரவுண்ட் அப்: கோவையில் ஒரேநாளில் 46 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
கோவை: கோவையில் முதன் முறையாக ஒரே நாளில் அதிகளவாக, 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோவை பீளமேடு மசக்காளிபாளையம் பகுதியில், விதிகளை மீறி ஜவுளிக்கடை ஒன்றில், 60க்கும் மேற்பட்டோர் கூடினர். இதையடுத்து அங்கு சென்ற வருவாய் துறை

கோவை: கோவையில் முதன் முறையாக ஒரே நாளில் அதிகளவாக, 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.latest tamil newsகோவையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோவை பீளமேடு மசக்காளிபாளையம் பகுதியில், விதிகளை மீறி ஜவுளிக்கடை ஒன்றில், 60க்கும் மேற்பட்டோர் கூடினர். இதையடுத்து அங்கு சென்ற வருவாய் துறை அலுவலர்கள் கடைக்கு சீல் வைத்தனர்.


ஜவுளிக்கடையில் 25 பேருக்கு கொரோனா


அக்கடையில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்,ஒரே நாளில் அக்கடையில் இருந்த, 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அக்கடைக்கு வந்து சென்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


latest tamil newsஇதேபோல், துடியலுாரை சேர்ந்த ஐந்து பேர், ராமநாதபுரம் ஒலம்பஸ், கோவை ஆடீஸ் வீதியை சேர்ந்த தலா மூவர், இடையர்பாளையம், செல்வபுரத்தை சேர்ந்த தலா இருவர், கவுண்டம்பாளையம், கோல்டுவின்ஸ், சேரன் மாநகர், கெம்பட்டி காலனி, பன்னிமடை, கோவை அரசு மருத்துவமனை, நேரு நகர், காங்கேயம்பாளையம், ஆர்.எஸ்.புரம், போத்தனுார் செட்டிபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா ஒருவர் உட்பட, 46 பேருக்குஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியானது.
கோவையில் முதன் முறையாக ஒரே நாளில், 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சுகாதார துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
29-ஜூன்-202008:23:32 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Prople are taking granted to go around once lock down released without taking precautions. Govt is announcing avoid crowded places., maintain social distsnce, wearing mask, washing hands but they never bother on this. Because these type of people others are getting affected. Unless people change this will not be controlled.
Rate this:
Cancel
Muguntharajan - Coimbatore,இந்தியா
29-ஜூன்-202006:43:25 IST Report Abuse
Muguntharajan தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிக்கையில் பாதிக்கப்பட்டவர்கள் 32 என்றுள்ளது. எது சரி?
Rate this:
Cancel
Sathish - Coimbatore ,இந்தியா
29-ஜூன்-202006:11:57 IST Report Abuse
Sathish அவ்வளவு அஜாக்கிரதை. வந்தா வரட்டும்னு முகக்கவசம் இல்லாமலும் தனி நபர் இடைவெளி இல்லாமலும் திரியிறானுங்க கோவையில்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X