'முதல்வரும் குற்றவாளி தான்: கமல்

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (64)
Advertisement
சென்னை; 'காவல்துறையின் கொலையை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் அரசும், போலீசாரை ஏவி மக்களை நசுக்கும் முதல்வரும், இதில் முதல் குற்றவாளிகளே' என, நடிகர் கமல் கூறியுள்ளார்.மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர், கமலின் அறிக்கை:சாத்தான்குளத்தில் நிகழ்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணமும், அதைச் சுற்றி நிகழ்ந்துள்ள மனித உரிமை மீறல்களும், சட்ட மீறல்களும், நம்மில் எவருக்கு
 'முதல்வரும், குற்றவாளி, தான், கமல்

சென்னை; 'காவல்துறையின் கொலையை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் அரசும், போலீசாரை ஏவி மக்களை நசுக்கும் முதல்வரும், இதில் முதல் குற்றவாளிகளே' என, நடிகர் கமல் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர், கமலின் அறிக்கை:சாத்தான்குளத்தில் நிகழ்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணமும், அதைச் சுற்றி நிகழ்ந்துள்ள மனித உரிமை மீறல்களும், சட்ட மீறல்களும், நம்மில் எவருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்ற, அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

இது, கொலை பாதக குற்றம். சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை பார்க்கும் போது, அரசு இவ்விஷயத்தில் துளி கூட உண்மை தன்மையை கண்டறிய முயலவில்லை என்பது, தெளிவாகிறது.பாதித்த குடும்பத்திற்கு நிவாரண உதவியை மட்டும் அறிவித்து விட்டு, இக்கொலையை முதல்வர் கடந்து விடக் கூடாது. நிதியுதவியை காட்டிலும் நீதி அவசியம். இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும், தண்டிக்கப்பட வேண்டும்.

காவல்துறையின் கொலையை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் அரசும், போலீசாரை ஏவி மக்களை நசுக்கும் முதல்வரும், இதில் முதல் குற்றவாளிகளே. துாத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில், 13 பேரை கொன்ற எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தற்போது, இரண்டு உயிர்கள் கொல்லப்பட்டுள்ளன.இந்த அரசு, பயங்கரவாதத்தை அனுமதித்து, ஆதரித்து வளர்த்து வருகிறது. சட்டத்தையும், மக்களின் உயிர், உணர்வையும் மதிக்காத இந்த அரசு அகற்றப்பட வேண்டும். இனி எந்த உயிரும் பாதிக்காமல் இருக்க, இதை செய்ய வேண்டியது நம் கடமை.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaresan - Petaling Jaya,மலேஷியா
30-ஜூன்-202014:30:34 IST Report Abuse
kumaresan இந்த மனுஷன் ஒரு புறம். இவரின் கூற்றுப்படி பார்த்தல் இந்த நாடு ஜனாதிபதியையும் குற்றவாளியாக ஆக்கிவிடவேண்டியதுதான் என்ன அறிவு என்ன அறிவு புல்லரிக்கிறது கமலா ஹாசன் சார் போலீஸ் அராஜகத்தை ஆடடிக்கும் அரசு எப்படி இந்த வழக்கை சிபிஐ க்கு மாற்றியது? சற்று யோசித்து பேசுவது சாலச்சிறந்தது .
Rate this:
Cancel
நிலா - மதுரை,இந்தியா
29-ஜூன்-202021:33:17 IST Report Abuse
நிலா நம் மீது குற்றமில்லாமல் இருந்தால் கமல் நீங்கள் யாரையும் குற்றம்சாட்டலாம் தங்கள் மீதே ஆயிரம் குற்றச்சாட்டுகள் இருக்கும்போது நீங்கள் பேசுவது நியாயமில்லை
Rate this:
Cancel
Gurumoorthy - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
29-ஜூன்-202021:13:52 IST Report Abuse
Gurumoorthy what was happening when 2 sadhus brutally murdered by an organized gang in Maharashtra, so if death of Hindus it is ok for Kamalhassan, when it is 2 minorities death immediately he frames charges on government and police. Anyways we do not agree of either custodial or judicial deaths or brutal murders and condemn, but these type of pseduo persons should be stopped blabbering in this country. India has too much democracy wherein any Tom, Dick and Harry can comment ively as their wishes.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X