அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொய் மகுடம் சூட்டாதீர்கள்: ஸ்டாலின்

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (45)
Share
Advertisement
 பொய், மகுடம், சூட்டாதீர்கள்,ஸ்டாலின்

சென்னை; 'கொரோனா ஒழியாத நிலையில், ஒழித்து விட்டதாக பொய்யான மகுடம் சூட்டிக் கொள்ளாதீர்கள்' என, முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

ஸ்டாலின் வெளியிட்டு உள்ள வீடியோ பதிவு:கொரோனா நோய் தொற்று, ஒன்றிரண்டு பேருக்கு மட்டுமே பரவிய, துவக்க நிலையில் இருந்து தற்போது வரை, தமிழக அரசுக்கு, மக்களின் பாதுகாப்பு கருதி, நுாற்றுக்கணக்கான ஆலோசனைகளை, நான் வழங்கி வருகிறேன்.


அலட்சியம்ஏராளமான டாக்டர்கள், என்னிடம் பேசி வருகின்றனர். அவர்களுடைய ஆலோசனைகளையும், அரசுக்கு சொல்லி வந்திருக்கிறேன். 'இவர் என்ன சொல்வது; நாம் என்ன கேட்பது' என, அலட்சியமாக, முதல்வர் இருந்தார். பாறையில் முட்டினால் தலை தான் வலிக்கும் என்பது மாதிரி ஆகிவிட்டது.'சமூகப் பரவலாகி விட்டது' என, மருத்துவ நிபுணர் ஜேக்கப் ஜான் பேட்டி அளித்துள்ளார். பல மருத்துவ நிபுணர்களும் சொல்கின்றனர். ஆனால், இல்லை என, பிடிவாதமாகச் சொல்கிறார், முதல்வர்.

என் ஆலோசனையை மட்டுமல்ல, யாருடைய ஆலோசனையையும் கேட்கிற மன நிலையில், முதல்வர் இல்லை. அந்த முதிர்ச்சி இன்மையினால் தான், தமிழகம் மிக மோசமான பேரழிவை சந்திக்க வேண்டியதாயிற்று. இந்த ஒட்டுமொத்த பேரழிவுக்கும், ஒரே ஒரு ஆள் காரணம் என்றால், முதல்வர் தான்.

'கொரோனாவை கட்டுப்படுத்த, ஸ்டாலின் இதுவரைக்கும், எந்த ஆக்கபூர்வமான ஆலோசனையையாவது, அரசுக்கு சொல்லி இருக்கிறாரா' என, கேட்டிருக்கிறார்.என் அறிக்கைகள் அனைத்துமே, அக்கறையுடன் அரசுக்கு ஆலோசனை சொல்லும் தான். கொரோனாவிற்கு, 60 கோடி ரூபாய் நிதி போதாது, 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்குங்கள் என, கேட்டது யார்; மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரியுங்கள் என, கோரிக்கை வைத்தது யார்; பரிசோதனைகளை அதிகரியுங்கள் என, எச்சரித்தது யார்?ஆலோசனைபத்தாம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டாம் என்று சொன்னது யார்; இவ்வளவையும் சொன்னது, நான் தான். ஆனால், ஸ்டாலின் என்ன ஆலோசனை சொன்னார் என்று கேட்கிறாரே!

'இந்தியாவிலேயே நோயை வைத்து, அரசியல் செய்வது, ஸ்டாலின் தான்' என, முதல்வர், இ.பி.எஸ்., சொல்கிறார். நோயை வைத்து, அரசியல் செய்ய வேண்டிய அவசியம், எனக்கு இல்லை. இதுவரை எல்லா ஆலோசனைகளையும் சொல்லி விட்டேன். இப்போது, அவருக்குச் சொல்வதற்கு, ஒரே ஒரு ஆலோசனை தான் இருக்கிறது.கொரோனாவை ஒழித்து விட்டு, அதற்கான சாதனை பட்டத்தைச் சூட்டிக் கொள்ளுங்கள். கொரோனாவே ஒழியாத நிலையில், ஒழித்துவிட்டதாக பொய்யான மகுடம் சூட்டிக் கொள்ளாதீர்கள்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை வடக்கு மாவட்ட, தி.மு.க., செயலர், சுதர்சனம் எம்.எல்.ஏ., வெளியிட்ட அறிக்கையில், 'சென்னை, தண்டையார்பேட்டை மண்டலத்தில், தினந்தோறும், கொரோனா தொற்று அதிகரிக்கிறது. 'உண்மையை மறைத்து, பொய்யான விளம்பரத்தை, அமைச்சர் பாண்டியராஜன் தேடுகிறார்' என, கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
29-ஜூன்-202023:00:06 IST Report Abuse
 rajan அண்மையில் இறந்தபோன உங்கள் கட்சி எம் எல் ஏ ஆவி பேசுவது போன்ற வாட்ஸ் அப் செய்தி உலா வருகிறது. படிப்பதற்கு சுவையாக இருந்தாலும் மிகவும் நியாயமான அங்கலாய்ப்பு. ஸ்டாலின் படித்தால் நிச்சயம் மனசாட்சி ஏற்றுக்கொள்ளும்.கொரானாவால் இறந்த திமுக சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் ஆவி கரங்கள் கூப்பி கண்களில் நீர்வழிய பேசுகிறது.ஏம்மா, நான் உங்க அண்ணன் கொரானா காலத்துல தனியா இருக்க வேண்டிய காலத்துல "ஒன்றிணைவோம் வா" ங்குற திட்டத்தை செயல்படுத்தணும்ன்னு சொன்னதால அதை தீவிரமா செயல்படுத்த போய் கடைசியில அதே கொரானா நோய் வந்து நான் செத்தே போனேன்.கட்சிக்காக நான் எவ்வளவோ செலவு பண்ணுனேன்..ஆனால் அந்த கட்சி என்னோட மருத்துவ செலவு 22 லட்சம் ரூபாயை கூட ஏத்துக்கலை..என்னோட குடும்பத்துக்கு இதுவரை எந்த நிவாரண தொகையும் கட்சி குடுக்கலை.நீங்க எல்லாரும் சென்னையில இருந்துகிட்டே என்னோட இறுதி சடங்கு நடக்குற இடத்துக்கு யாரும் அஞ்சலி செலுத்தவும் வரலை. அறிவாலயத்துல கால்ல செருப்புகளை போட்டுக்கிட்டு கையில உறைகளை மாட்டிக்கிட்டு ஏதோ முறையை கழிக்க என்னோட படத்தை மாட்டி மாலையை போட்டு பூக்களை தூவிட்டு ஊடகங்களுக்கு போஸ் குடுத்துட்டு போயிட்டீங்க.ஆனால், யாரோ அறிமுகம் இல்லாத கட்சிக்கே சம்பந்தம் இல்லாத இரண்டு கிறிஸ்தவங்க செத்து போயிட்டாங்கன்னு தெரிஞ்சதுமே அந்த கிறிஸ்தவ நாடார்கள் ஓட்டு தலைவர் தங்கச்சி அதான் உங்களுக்கு வேணும்ங்குற நோக்கத்தோட சென்னையில இருந்து ஏழு நூறு கிலோ மீட்டர் தூரத்துல இருக்குற சாத்தான்குளத்துக்கு இந்த கொரானா கால கட்டுப்பாட்டுலேயும் அவுங்க வீட்டுக்கு நேரடியா போய் துக்கம் கேட்டுட்டு அந்த குடும்பத்துக்கு கட்சியில இருந்து நிவாரண தொகையா 25 லட்சம் ரூபாய் கொடுத்தீங்க.. உதயநிதியும் வீட்ல போய் விசாரிச்சார்.. இதெல்லாம் நியாயமா..அப்போ கட்சிக்காக வேலை பாத்து உயிரை விட்ட எனக்கும் என்னோட குடும்பத்துக்கும் நீங்க செலுத்துற மரியாதை இதுதானா..நான் இறந்தாலும் என்னோட ஆன்மா உங்களை மன்னிக்காது.அதோட துக்கத்துக்கும் வேதனைக்கும் உரிய விலையை நீங்க எதிர் காலத்துல குடுத்தே ஆகணும். குடுப்பீங்க.
Rate this:
Cancel
கிருஷ்ணமூர்த்தி ரா காவிரி வராமலேயே கவிரி கொண்டான் என்று பட்டம் சூட்டிக் கொண்டவரின் மகனின் துடிப்பை உணரமுடிகிறது! கொரோனா கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதையே ஜீரணிக்க முடியாதவர், எங்கே முதல்வர் தன் முயற்சியில் வெற்றி பெற்றுவிடுவாரோ என்ற பயமும் தெரிகிறது!
Rate this:
Cancel
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
29-ஜூன்-202022:19:13 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் சிம்பிள் ஒருத்தனுக்கு எதிரிகள் அதிகம் என்றால் அவனை பார்த்து பயந்து சாகிறார்கள் என்று அர்த்தம் ஆகவே ஸ்டாலின் இப்போ சரியான பாதையில் தான் சென்று கொண்டு இருக்கிறார் என்று தெரிகிறது மேலும் இந்த மாதிரி எதிரிகள் இல்லை என்றாலும் ??????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X