அமெரிக்காவில் இந்தியருக்கு கொரோனாவால் மன அழுத்தம்

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 அமெரிக்கா, இந்தியர், கொரோனா, மன அழுத்தம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள், கொரோனாவின் தாக்குதலால், தங்கள் வருங்கால பொருளாதாரம் குறித்து, கவலை அடைந்துள்ளனர் என, ஆய்வில் தெரியவந்து உள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள், வைரசின் தாக்குதலால் சந்தித்துள்ள பிரச்னைகள் குறித்து, இந்தியாவில் இருந்து, புலம் பெயர்ந்தோருக்கான அறக்கட்டளை, முதற்கட்ட ஆய்வினை நடத்தியது.இதன் முடிவுகள் குறித்து, அதன் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:அமெரிக்காவில் வசிக்கும், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஐந்தில் இருவருக்கு, தங்கள் எதிர்கால பொருளாதார நிலை குறித்தும், நீண்டகால நிதி திட்டங்கள் குறித்தும் கவலை ஏற்பட்டுள்ளது.

இதனால், அவர்களில் பலரும் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றி உள்ளனர். பெரும்பாலான செலவினங்களை குறைக்கும் நடவடிக்கைகளை அவர்கள் தீவிரப்படுத்திஉள்ளனர்.இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களில், ஆறு நபர்களில் ஒருவருக்கு, வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஆனாலும், இவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் சார்பில் உடனடியாக உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்குமிடம், மருத்துவ உதவிகள், உணவு வழங்கப்படுகிறது.

இந்திய வம்சாவளி அமெரிக்கர்களில், ஆறில், ஐந்து பேர், குடும்ப உறவுகளுடன் எவ்வித பிரச்னையும் இல்லாமல், நேர்மறையான வாழ்க்கை முறையை பின்பற்றுகின்றனர். ஆனால், நான்கில் ஒருவர், மன அழுத்தத்துடன், வாழ்வில் நம்பிக்கை இல்லாத நிலையை உணர்கிறார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kannappan - bahrain,பஹ்ரைன்
29-ஜூன்-202015:56:37 IST Report Abuse
kannappan அமெரிக்கா வாழும் இந்தியருக்கு மட்டும் இல்லை மற்ற அணைத்து நாடுகளிலும் வாழும் இந்தியருக்கு இந்த பிரச்சனை உண்டு . அமெரிக்கா என்றால் சிறப்பு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X