அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ., நினைவிடம் கட்டுமானம்: முதல்வர் உத்தரவு

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
சென்னை; ஜெயலலிதா நினைவிடத்தின் இறுதிக்கட்ட பணிகளை, பொதுப்பணி துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.சென்னை, மெரினா கடற்கரையில், மறைந்த ஜெயலலிதாவிற்கு, 50.8 கோடி ரூபாய் செலவில், நினைவிடம் கட்டப்படுகிறது.கட்டுமான பணிகளை, ஜூலை இறுதிக்குள் முடிக்க, பொதுப்பணி துறை அதிகாரிகளுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டு உள்ளார். ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், 'பீனிக்ஸ்'
 ஜெ., நினைவிடம் ,கட்டுமானம், முதல்வர், உத்தரவு

சென்னை; ஜெயலலிதா நினைவிடத்தின் இறுதிக்கட்ட பணிகளை, பொதுப்பணி துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.சென்னை, மெரினா கடற்கரையில், மறைந்த ஜெயலலிதாவிற்கு, 50.8 கோடி ரூபாய் செலவில், நினைவிடம் கட்டப்படுகிறது.கட்டுமான பணிகளை, ஜூலை இறுதிக்குள் முடிக்க, பொதுப்பணி துறை அதிகாரிகளுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டு உள்ளார்.

ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், 'பீனிக்ஸ்' பறவை வடிவ கட்டடம் கட்டப்படுகிறது.இந்த கட்டடம், அதிநவீன கான்கீரிட் கலவையை பயன்படுத்தி, சென்னை ஐ.ஐ.டி., நிறுவனம் வடிவமைத்து தந்த தொழில்நுட்பத்தில் கட்டப்படுகிறது.

ஊரடங்கு காலத்திலும், உரிய வழிமுறைகளை பின்பற்றி, கட்டுமான பணிகள் நடக்கின்றன. இதற்காக, வட மாநில தொழிலாளர்கள், தமிழக கம்பி கட்டும் தொழிலாளர்கள், அங்கேயே தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு, ஓமந்துாரார் அரசு மருத்துவ குழு வாயிலாக, அடிக்கடி உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, பீனிக்ஸ் பறவை கட்டடத்தின், இறுதிக்கட்ட பணிகள் துவங்கி உள்ளன.

இதற்காக, ராட்சத, 'கிரேன்' வரவழைக்கப்பட்டு, பீனிக்ஸ் பறவை கட்டடத்தின் மேல் பகுதியில், துபாயில் இருந்து எடுத்து வரப்பட்ட மிகப்பெரிய இரும்பு கூண்டு பொருத்தப்பட்டு உள்ளது. இதில், கான்கிரீட் கலவை போடும் பணி விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கிடையில், தரை பகுதிகளில் புற்கள் அமைத்தல், நடைபாதை கற்கள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkata achacharri - india,இந்தியா
03-ஜூலை-202012:03:52 IST Report Abuse
venkata achacharri பீனிக்ஸ் பறவை கட்டடத்தின் மேல் பகுதியில், துபாயில் இருந்து எடுத்து வரப்பட்ட மிகப்பெரிய இரும்பு கூண்டு பொருத்தப்பட்டு உள்ளது வாழ்க மேக் இந்த இந்தியா இதற்க்கு தமிழ் நாட்டின் என்பது கோடி கடனை அடைத்துஇருக்கலாம் கடன்வாங்கி மணிமண்டபம் கட்டுவது தான் தலையை கடமை நாம் என்று திருந்தவூம் என்று கடனை அடைபூம்
Rate this:
Cancel
Rajesh - Chennai,இந்தியா
02-ஜூலை-202001:04:46 IST Report Abuse
Rajesh A1
Rate this:
Cancel
29-ஜூன்-202015:05:55 IST Report Abuse
ஸ்டாலின் :: சீக்கிரம் கட்டுங்கடா அப்புறம் ஸ்டாலின் வந்தா கட்ட முடியுமோ இல்லை முடியாதோ
Rate this:
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
29-ஜூன்-202019:20:26 IST Report Abuse
uthappaஅந்த பயமே வேண்டாம்.அவராவது வருவதாவது.மக்கள் இந்த அரசின் குறைகளை பார்க்கும்போது பாழாய்ப்போன அவர்களின் குறைகளும் , ஊழல்களும் கூடவே வந்து தொலைக்கின்றன.பரம்பரை குடும்ப திருடர்களுக்கு வெறும் பிக்கபாக்கெட் பரவாயில்லை என்று என்ன தோன்றுகிறது.குடும்பம் மட்டும் இன்றி வீட்டு வேலைக்காரர்கள் சில ஆயிரம் பேரும் பிரியாணி கடை, பியூட்டி சலூன், பஜ்ஜி கடை என்று சுருட்டுவதும் நினைவுக்கு வருது.ஆட்சியில் இல்லாத போதே செருப்பை கழட்டி பெண்ணை அடிக்க வரும் எம் எல் ஏ , டோல் கேட் நிலையத்தில் போலீசை உதைக்க வரும் எம் எல் ஏ ...இப்படி எத்தனையோ... மக்கள் இவர்கள் வேண்டாம் என்றால் அவர்கள் வேண்டவே வேண்டாம் என்கிற மன நிலைக்கு தள்ள பட்டு விட்டார்கள்.புதியதாக ஒரு சீமானையி, கமலையோ..... கூட ஆதரிப்பார்கள், ஆனால் சுயநலவாதிகள் மட்டுமே சுடாலினுக்கு வாக்களிப்பார்கள்....
Rate this:
29-ஜூன்-202022:15:07 IST Report Abuse
ஸ்டாலின் ::appadiya 38/39 eppadi solluviya , 2500 uratchi padhavigal eppadi nee sonnadhu ellam LITTLE MILLENUM scholl pasanga solra visyam america poi innum nee valarala enru therigiradhu...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X