அமெரிக்க இளைஞர்களைத் தாக்கும் கொரோனா; ஆறுதல்படுத்தும் சிடிசி| COVID-19 pandemic has moved into younger populations in U.S, says CDC | Dinamalar

அமெரிக்க இளைஞர்களைத் தாக்கும் கொரோனா; ஆறுதல்படுத்தும் சிடிசி

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (6)
Share

வாஷிங்டன் : அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது.latest tamil newsஅமெரிக்காவின் சென்டர் பார் டிஸீஸ் கண்ட்ரோல் (சிடிசி) அமைப்பு இதுகுறித்து கூறுகையில் அமெரிக்காவில் தற்போது கொரோனாவின் தாக்கம் வயோதிகர்கள்ளிடமிருந்து இளைஞர்கள் பக்கம் திரும்பியுள்ளது என கூறியுள்ளது. இதுகுறித்து பத்திரிகைக்கு பேட்டியளித்த சிடிசி இயக்குனர் ராபர்ட் ரெட்பீல்டு கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவில் 30 வயதுக்குக்கீழ் உள்ள இளைஞர்களை தாக்கத் தொடங்கியுள்ளது. இவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால் வைரஸ் தாக்கத்திலிருந்து விரைவில் குணம் அடைந்து விடுவார். இதனால் இறப்பு விகிதமும் கணிசமாகக் குறையும் வாய்ப்புள்ளது.

மேலும் டயாலிசிஸ் மேற்கொள்வோர், சிறுநீரக செயலிழப்பு, இருதய கோளாறு, சர்க்கரை நோய், புற்றுநோய், அல்சைமர் உள்ளிட்ட நாள்பட்ட நோய்கள் தாக்கப்பட்டவர்களை கொரோனா எளிதில் பாதிக்கும். இந்த நோய்கள் அற்ற இளைஞர்கள் கொரோனா தாக்கத்தில் இருந்து விரைவில் குணமடைந்துவிடும் வாய்ப்பு உள்ளது.


latest tamil newsமுக்கியமாக ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக் கோளாறு இல்லாத ஆரோக்கியமான நுரையீரல்கள் கொண்ட இளைஞர்கள் மற்றவர்களைவிட வெகு விரைவில் குணமடைந்து விடுகின்றனர். எனவே இளைஞர்கள் கொரோனாவால் தாக்கப்படும்போது அதிகம் பயப்படத் தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் தன்மை மற்றும் தாக்கம் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். அது சில சமயங்களில் வயோதிகர்களையும் சில சமயங்களில் இளைஞர்களையும் சில சமயங்களில் நடுத்தர வயதினரையும் தாக்கும். மேலும் அதன் வீரியமும் மாறுபாட்டுக் உள்ளாகும். சில சமயங்களில் வீரியம் குறைவாக இருக்கும். இந்த நேரத்தில் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகும் நோயாளிகள் இளைஞர்களாக இருக்கும்பட்சத்தில் விரைவாக குணமடைந்து வீடு திரும்பி விடுவர்.

ஒருவாரம் முதல் பத்து நாட்கள்வரை அவர்கள் தனிமை வார்டில் சிகிச்சை பெற்று வந்தாலே போதுமானது என சிடிசி தெரிவித்துள்ளது. இச்செய்தி கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் கலிபோர்னியா, நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் சற்று ஆறுதலாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X