எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

மாநிலம் முழுதும் அதிகரிக்குது கொரோனா பாதிப்பு: சென்னை போல சொதப்பாமல் கவனிப்பது அவசியம்!

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
 மாநிலம், முழுதும் ,அதிகரிக்குது ,கொரோனா பாதிப்பு,சென்னை போல ,சொதப்பாமல், கவனிப்பது ,அவசியம்!

சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மட்டுமே, கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த நிலையில், தற்போது, அனைத்து மாவட்டங்களிலும், அதிகரிக்க துவங்கிஉள்ளது.

சென்னை மாநகராட்சியில் நிலைமை மோசமானதை போல, மற்ற பகுதிகளிலும் மோசமாகாமல் இருக்க, மாவட்ட நிர்வாகங்களை தமிழக அரசு முடுக்கிவிட்டு, தடுப்பு நடவடிக்கைகளைதீவிரப்படுத்த வேண்டியது அவசியம். தமிழகத்தில், கொரோனா பரவல், மார்ச், ஏப்ரல் மாதங்களில் துவங்கியது. வெளிநாட்டில் இருந்து வந்தோர், டில்லியில் நடந்த மத மாநாட்டில் பங்கேற்று திரும்பியோரால், சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில், ஆங்காங்கே பாதிப்பு ஏற்பட்டது.


மோசமானது நிலைமைகோயம்பேடு மார்க்கெட் விவகாரத்தில், உறுதியான முடிவு எடுக்காமல், மாநகராட்சி கோட்டை விட்டதால், மார்க்கெட் வாயிலாகவும் நோய் தொற்று பரவியது. அங்கிருந்து சென்ற வியாபாரிகள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களால், பிற மாவட்டங்களிலும், கொரோனா பரவத் துவங்கியது.

மாவட்ட நிர்வாகங்களை, அரசு முடுக்கி விட்டதால், பிற மாவட்டங்களில், கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தது. ஆனால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாதிப்பு, வேகமாக அதிகரித்தது. பரிசோதனை செய்வதில் இழுத்தடிப்பு, தனிமைப்படுத்துவதில் கவனம் செலுத்தாதது, 'மைக்ரோ லெவல் திட்டமிடல்' இல்லாதது, மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள், ஆளாளுக்கு சட்டம்பிள்ளை ஆனது போன்ற வற்றால், நிலைமை மோசமானது.

இந்த நேரத்தில், அரசும் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. மயிலாடுதுறை - கோவை; காட்பாடி - கோவை; விழுப்புரம் - மதுரை; திருச்சி - கன்னியாகுமரி வழித்தடங்களில் ரயில் சேவையும் துவக்கப்பட்டது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்கள், ஆறு போக்குவரத்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, பஸ்களின் சேவையும் துவங்கியது.


தடுக்க முடியவில்லை

இதனால், சென்னையில் இருந்து தப்பித்தால் போதும் என, பலர் விதிமுறைகளுக்கு மாறாக, காய்கறி வண்டிகள், டூ-வீலர்கள், சரக்கு வண்டிகள் வாயிலாக, முறையான அனுமதியின்றி, சொந்த ஊர்களுக்கு சென்றனர். சிலர் விழுப்புரம் வரை நடந்தே சென்றனர். அங்கிருந்து கிடைத்த வண்டிகளில் ஏறி, சொந்த ஊர்களுக்கு சென்றனர். இவ்வாறு, 10 லட்சம் பேர் வரை, சென்னையில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

சில மாநகராட்சி அதிகாரிகளின் தில்லுமுல்லு வேலைகளாலும், முறைகேடாக, 'இ - பாஸ்' வழங்கப்பட்டு, நோய் பாதித்த பலர் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதை, அரசால் தடுக்க முடியவில்லை. இப்படி இடம் பெயர்ந்தவர்களால், கொரோனா பாதிப்பு மற்ற மாவட்டங்களில் அதிகரிக்க காரணமாகி விட்டது.

சென்னையில், 50 ஆயிரம் பேர் உட்பட, தமிழகத்தில், 80 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த சில நாட்களில், பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கும் என, சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.சென்னையில் உச்சத்தில் இருக்கும் போதே, தமிழகத்தின் மற்ற நகர்புறங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என, சுகாதார நிபுணர்கள் எச்சரித்தனர். அப்போதே, அரசு சிறப்பு கவனம் செலுத்த தவறியதால், மதுரை, வேலுார், தேனி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது.


அரசுக்கு பரிந்துரைஇதுகுறித்து, சுகாதார நிபுணர்கள் கூறியதாவது:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து, சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவோரை, உரிய பரிசோதனைக்கு பின், அரசு பஸ்சில், சமூக இடைவெளியுடன் அனுப்பி வைக்கும்படி, அரசுக்கு பரிந்துரை செய்தோம். அவ்வாறு அனுப்பி வைக்கப்படுவோரை, அந்தந்த மாவட்டங்களில், கொரோனா தடுப்பு சிறப்பு மையங்களை ஏற்படுத்தி, 14 நாட்கள் தனிமைப்படுத்தலாம்; இல்லையென்றால், மற்ற மாவட்டங்களுக்கு கொரோனா பரவுவதற்கு இவை காரணமாக அமையும் என்றும், எச்சரித்தோம்.ஆனால், பொருட்செலவு, நடைமுறை சிக்கல் போன்றவற்றை கணக்கிட்டு, அரசு ஏற்க மறுத்தது. பிழைப்பு தேடி சென்னை வந்தவர்கள் வேலையின்றி வாழ்க்கையை ஓட்ட முடியாது.


மருத்துவ கண்காணிப்புஏராளமான குடும்பங்களுக்கு ரேஷன் கார்டு இங்கு இல்லை; இதனால், அரசு வழங்கிய ரேஷன் பொருட்களோ, நிவாரண நிதியோ அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதுவே, மக்களின் இடம் பெயரலுக்கு முக்கிய காரணமாக இருந்தது.

இதற்கு மாற்று ஏற்பாடுகளை அரசு செய்திருக்க வேண்டும்.தற்போது, மாவட்டங்களில் பரவல் அதிகரித்துள்ளது. சென்னையில் மாநகராட்சி சொதப்பியது போல் அல்லாமல், மாவட்ட நிர்வாகங்களை அரசு முடுக்கிவிட வேண்டும்.அனைத்து மாவட்டங்களிலும், கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். அதற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை அரசு வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்டோர், அவரது குடும்பத்தினர், தொடர்பில் இருந்தோர் அனைவரையும் தனிமைப் படுத்தி, மருத்துவ கண்காணிப்பில் கொண்டு வர வேண்டும்.கிராம செவிலியர், ஊராட்சி அலுவலர்கள், தன்னார்வலர்களை பயன்படுத்தி, வீடு தோறும் ஆய்வு செய்ய வேண்டும். அறிகுறி உள்ளோரை உடனே பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இதற்கு அனைத்து தரப்பு அதிகாரிகளையும்ஒருங்கிணைத்து, பணிகளை முடுக்கி விட வேண்டும். இதுதவிர, ஊரடங்கையும் நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அரசு சிறப்பு கவனம் செலுத்தினால், மாவட்டங்களில் நோய் பரவலை கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
29-ஜூன்-202013:38:35 IST Report Abuse
அசோக்ராஜ் சென்னையிலிருந்து சாத்தான்குளம் சென்ற உதயநிதி என்பவனுக்கு ஏன் சோதனை குவாரண்டைன் எதுவும் இல்லை? முதல்வரும் சுகாதார அமைச்சரும் பதில் சொல்ல கடமைப் பட்டவர்கள். இதற்கு பதில் சொல்லாமல் ஊரடங்கை நீட்டித்தால் அது மக்களின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகத்தான் கருதப்படும். பணம் படைத்தவனுக்கு ஒரு சட்டம். பாட்டாளிக்கு வேறு சட்டம். அப்பாவி ஏழையின் பைக்கைப் பறிமுதல் செய்து பணம் பண்ணும் போலீஸ் துறைத்தலைவர் உதயநிதியை கைது செய்வாரா? படித்தவன் சூதும் வாதும் செய்தால் அய்யோ என்று போவானாம். வரலாற்றில் உதாரணங்கள் ஏராளம்.
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
29-ஜூன்-202012:13:28 IST Report Abuse
R. Vidya Sagar இனிமேல் சொதப்புவதற்கு என்ன உள்ளது? அதான் நோயை மாநிலம் முழுதும் பரப்பியாச்சே.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
29-ஜூன்-202012:08:39 IST Report Abuse
Visu Iyer சென்னையில் சொதப்பல் என்று செய்தியே வருது.. அப்போ ஏன் இன்னமும் இந்த அரசை கலைக்க வில்லை.. தகுதி இல்லாத அரசை இன்னமுமா தலைமை பதவியில் வைத்து இருக்க .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X