'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக உ.பி., சட்டசபை கூட்டத்தொடர்

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
உ.பி., சட்டசபை, கூட்டத்தொடர், 'வீடியோ ,கான்பரன்ஸ்'

லக்னோ:உத்தர பிரதேச மாநில சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடரை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, சட்டசபை சபாநாயகர் நாராயண் தீட்ஷித் அறிவித்துள்ளார்.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக, ஊரடங்கு அமலில் உள்ளதால், சட்டசபை கூட்டத் தொடரை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின், சபாநாயகர் நாராயண் தீட்ஷித் கூறியதாவது:சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரை, ஆகஸ்ட் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா பிரச்னை காரணமாக, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, இந்த கூட்டத்தை நடத்த வாய்ப்புள்ளது. மேலும் சில வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

லக்னோவில் உள்ள லோக்பவன் அரங்கில், போதிய இடவசதி உள்ளதால், அங்கு, சமூக விலகல் நடைமுறையை பின்பற்றி, கூட்டத் தொடரை நடத்தவும் வாய்ப்புள்ளது. சட்டசபையில், மேல் பகுதியில் உள்ள இருக்கைகளை காலி செய்து விட்டு, வேறு பகுதிகளில் இருக்கை வசதியை ஏற்படுத்தி, கூட்டத்தை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதில், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடத்துவதே சிறந்த வழி என தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், முதல்வர் யோகி ஆதித்யநாத், இது குறித்து இறுதி முடிவு எடுப்பார். சமீபத்தில், ஐரோப்பிய நாடான பிரிட்டனில், பார்லிமென்ட் கூட்டம் வித்தியாசமான முறையில் நடத்தப் பட்டது. குறிப்பிட்ட சிலர் மட்டும் பார்லிமென்டிற்கு வந்திருந்தனர். மற்றவர்கள் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பங்கேற்றனர். உ.பி., சட்டசபை கூட்டத்தை அதுபோல் நடத்த வாய்ப்பில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஜூன்-202007:26:11 IST Report Abuse
ஆப்பு அப்படியே புலன் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் வீடியோ கான்ஃபரன்ஸ் செய்யுற வேலை போட்டு குடுத்துருங்க. அவிங்களும் சும்மா கடலை போட்டு சம்பளம் வாங்கட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X