இ-பாஸ் இல்லாமல் விவசாயிகள் திணறல்: மின்இணைப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிக்க கோரிக்கை

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

உடுமலை:மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் இல்லாமல் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், விவசாய மின் இணைப்பு சார்ந்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாமல் விவசாயிகள் திணறிவருகின்றனர்.தமிழக மின்வாரியம் சார்பில், இலவச மின் இணைப்பு பயன்படுத்துபவர்கள், கூடுதல் பளு (எச்.பி.,) கேட்டு விண்ணப்பிக்க, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எச்.பி.,க்கு, 20 ஆயிரம் ரூபாய் வீதம் தொகை செலுத்தவும், அதோடு, மின் இணைப்பு பெயர் மாற்றுவதற்கான விண்ணப்பம் அளிக்கவும், மின்வாரியம் அறிவித்துள்ளது.
இந்த விண்ணப்பங்களோடு, சிட்டா, அடங்கல், உரிமைச்சான்று உட்பட வருவாய்த்துறை ஆவணங்களை சேர்த்து, சமர்ப்பிக்க வேண்டும்.'கொரோனா' தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, இத்தகைய ஆவணங்களை பெற காலதாமதம் ஆனது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, வரும் 30ம் தேதி இறுதிநாளாகும் என மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மாவட்டங்கள் இடையே இ-பாஸ் இல்லாமல் பயணிக்க அரசு தடைவிதித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட, பெரும்பாலான கிராம விவசாயிகள், கோவை மாவட்டத்துக்குட்பட்ட பொள்ளாச்சி, நெகமம் செயற்பொறியாளர் அலுவலகத்திலேயே விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.விண்ணப்பங்களை கொண்டு சென்ற பெரும்பாலான விவசாயிகள், மாவட்ட எல்லையிலுள்ள, செக்போஸ்ட்களில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.விவசாயிகள் கூறியதாவது:விவசாய மின் இணைப்புக்கு கூடுதல் பளு கேட்டு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்.தற்போதுள்ள சூழலில், கோவை மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மின் வாரிய அலுவலகங்களுக்கு செல்வதில் சிக்கல்நீடிக்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வுகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X