பொது செய்தி

இந்தியா

நோயாளிகளைவிட குணமானோர் ஒரு லட்சம் அதிகரிப்பு

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 28, 2020
Share
Advertisement
 நோயாளிகளை,விட, குணமானோர், ஒரு லட்சம், அதிகரிப்பு

புதுடில்லி:'நாட்டில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை விட, குணமானோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது' என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துஉள்ளது.

மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஆகியவற்றுடன், இணைந்து எடுத்த தடுப்பு மற்றும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களை விட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாடு முழுதும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஐந்து லட்சத்து, 28 ஆயிரத்து, 859 ஆக உள்ளது. இதில், மூன்று லட்சத்து, 9,712 பேர் குணமடைந்துள்ளனர். அதாவது பாதிப்பு எண்ணிக்கையை விட, குணமடைந்தோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 6,661 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் தற்போது, 1,036 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் இருக்கின்றன. இதில், அரசு சார்பில், 749 பரிசோதனை மையங்களும், தனியார் சார்பில், 287 மையங்களும் செயல்படு கின்றன.தினமும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதிக்கப் படுகின்றன.

கொரோனா நோயாளிகளுக்காகவே, 1,055 மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், ஒரு லட்சத்து, 77 ஆயிரத்து, 529 படுக்கைகள்; 23 ஆயிரம் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், ஆக்சிஜன் உதவியுடன் கூடிய, 78 ஆயிரத்து, 60 படுக்கைகள் உள்ளன.நாடு முழுதும் உள்ள, 2,400 கொரோனா சுகாதார மையத்தில், ஒரு லட்சத்து, 40 ஆயிரத்து, 99 படுக்கைகள் உள்ளன. இவற்றில், 11 ஆயிரத்து, 508 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய, 51 ஆயிரத்து, 371 படுக்கைகள் இருக்கின்றன.

இவை தவிர, நாடு முழுதும் உள்ள, 9,519 கொரோனா நோயாளிகள் பராமரிப்பு மையத்தில், எட்டு லட்சத்து, 34 ஆயிரத்து, 128 படுக்கைகள் உள்ளன.இதுவரை, 1.87 கோடி, 'என் - 95' முக கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன; 1.17 கோடி, பி.பி.இ., எனப்படும், தனிநபர் பாதுகாப்பு உடைகள் வழங்கப் பட்டு உள்ளன.இவ்வாறு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


ஒரு நாளில் 19,908 பேர் பாதிப்பு



'நாட்டில், கடந்த, 24 மணி நேரத்தில், கொரோனாவால், 19 ஆயிரத்து, 906 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஐந்து லட்சத்து, 28 ஆயிரத்து, 659 ஆக உயர்ந்துள்ளது' என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:தொடர்ந்து, ஐந்தாவது நாளாக, நாட்டில் கொரோனா பாதிப்பு, 15 ஆயிரத்தை கடந்துள்ளது.

கடந்த, 24 மணி நேரத்தில், 410 பேர் இறந்ததையடுத்து, பலியானோர் எண்ணிக்கை, 16 ஆயிரத்து, 95 ஆக உயர்ந்துள்ளது.இறந்த, 410 பேரில், 187 பேர் மஹாராஷ்டிராவையும், 68 பேர் தமிழகத்தையும், 66 பேர் டில்லியையும் சேர்ந்தவர்கள். உத்தர பிரதேசத்தில், ௧௬ பேர், மேற்கு வங்கத்தில், ௧௩ பேர், குஜராத்தில் எட்டு பேர் பலியாகி உள்ளனர். கர்நாடகா, ராஜஸ்தானில் தலா, 11 பேரும், ஆந்திராவில், ஒன்பது பேரும், ஹரியானாவில், ஏழு பேரும், தெலுங்கானா, பஞ்சாபில் தலா, ஆறு பேரும், மத்திய பிரதேசத்தில், நான்கு பேரும், ஜம்மு - காஷ்மீரில் இருவரும், பீஹார், ஒடிசா, புதுச்சேரியில் தலா, ஒருவரும் இறந்துள்ளனர்.

பாதிப்பில், மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இங்கு, ஒரு லட்சத்து, 59 ஆயிரத்து, 133 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 7,273 பேர் மரணமடைந்துள்ளனர். டில்லியில், 80 ஆயிரத்து, 188 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 2,558 பேர் மரணமடைந்துள்ளனர். தமிழகத்தில், 78 ஆயிரத்து, 335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1,025 பேர் மரணம் அடைந்துள்ளனர்.குஜராத்தில், 30 ஆயிரத்து, 709 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1,789 பேர் மரணமடைந்துள்ளனர். உ.பி.,யில், 21 ஆயிரத்து, 549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 649 பேர் மரணமடைந்துள்ளனர்.மேற்கு வங்கத்தில், 16 ஆயிரத்து, 711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 629 பேர் மரணமடைந்துள்ளனர். ராஜஸ்தானில், 16 ஆயிரத்து, 944 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 391 பேர் மரணமடைந்துள்ளனர்.தெலுங்கானாவில், 13 ஆயிரத்து, 436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 243 பேர் மரணமடைந்துள்ளனர். ஆந்திராவில், 12 ஆயிரத்து, 285 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 157 பேர் மரணமடைந்துள்ளனர். கர்நாடகாவில், 11 ஆயிரத்து, 923 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 191 பேர் மரணமடைந்துள்ளனர். கேரளாவில், 4,071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 22 பேர் மரணமடைந்துள்ளனர். புதுச்சேரியில், 619 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 10 பேர் இறந்துள்ளனர். தாதர் ஹவேலியில், 177; மிசோரமில், 148; சிக்கிமில், 87; அந்தமானில், 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளதில், ஒருவர் கூட இறக்கவில்லை. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X