சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

செய்தித்துறை அமைச்சர் ராஜு: பா.ஜ.,வினர், 'டுவிட்டரில்' பதிவிடுவதற்கும், சசிகலா விடுதலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எந்த குற்றவாளியாக இருந்தாலும் அவரது தண்டனை காலம் முடிவடைவதை கோர்ட்டும், சிறைத்துறையும் தான் முடிவு செய்யும். இதில், கட்சிகள் முடிவெடுக்க முடியாது. இதுபற்றி யோசிக்க நேரமில்லை. கொரோனா தவிர்த்து, மற்றவை குறித்து சிந்திக்க நேரம் இல்லை.
'டவுட்' தனபாலு: நீங்கள் சொன்னால் சரியாகத் தான் இருக்கும். எனினும், சசிகலா சிறையிலிருந்து, எப்படியாவது வெளியே வந்து விட மாட்டாரா; அதனால் தமிழக அரசுக்கு சிக்கல் ஏற்பட்டு விடாதா என, சில எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. அவர்களின் எண்ணம் நிறைவேறாது என்பதில், 'டவுட்'டே இல்லை!

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்: நாடு முழுதும் மார்ச், 25 முதல், பொது போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. இன்னும் ரயில் போக்குவரத்து துவங்கவில்லை. தமிழகத்தில், 1.50 லட்சம் ரயில் நிலைய சுமை துாக்கும் தொழிலாளர்கள், இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் குடும்பத்திற்கு, 2,000 ரூபாய் நிவாரணத்தை, தமிழக அரசு வழங்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: உங்கள் கோரிக்கை நியாயமானதே. சுமை துாக்கும் தொழிலாளர்கள் மட்டுமின்றி, நாட்டின் அனைத்து மட்டத்தில் உள்ளவர்களும், கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் மாதங்களில், அனைவர் கையிலும் செழிப்பான பணப்புழக்கத்திற்கு மத்திய - மாநில அரசுகள் ஏற்பாடு செய்யாவிட்டால், பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்று விடும் என்பதில், 'டவுட்'டே இல்லை.

தமிழக காங்., முன்னாள் தலைவர், திருநாவுக்கரசர்: தி.மு.க.,வால் தான், தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரிக்கிறது என, முதல்வர் கூறுவது முறையல்ல. மக்கள் மீது உள்ள அக்கறையால், மக்களுக்கு உதவி செய்த, தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் உயிரிழந்தார்.

'டவுட்' தனபாலு: தி.மு.க.,வின், 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டம், நல்ல திட்டம் தான். அ.தி.மு.க., அரசுக்கு போட்டியாக, தி.மு.க., பிரமுகர்களை களம் இறக்கி விட்டது தான் தவறு. எனினும், தி.மு.க.,வால் தான் தொற்று அதிகரித்தது என்பது, அரசியல் குற்றச்சாட்டு என்பது நடுநிலையாளர்களுக்கு, 'டவுட்'டே இருக்காது!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aaaaa - Bbbbbb,இந்தியா
29-ஜூன்-202010:01:29 IST Report Abuse
Aaaaa அந்த ஏழு பேர் தண்டனை காலம் முடிவடைவதை மட்டும் யார் யாரோ முடிவு செய்கிறார்களே?
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
29-ஜூன்-202005:54:07 IST Report Abuse
D.Ambujavalli அதிமுக அமைச்சர் வீட்டு கூட்டம் கொரானாவைப் பரப்பாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X