சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

முதல்வருக்கு, 'நச்'சுன்னு ஒரு கேள்வி!

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
டீ கடை பெஞ்ச்

''கொரோனா சிகிச்சையில, குளறுபடி இருக்குதாம் வே...'' என்றபடியே, திண்ணையில் அமர்ந்தார், அண்ணாச்சி.

''என்ன சொல்லுறீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில, கொரோனா உறுதி செய்யப்பட்ட நோயாளிகளையும், சந்தேகத்துல சேர்க்கப்பட்ட நோயாளிகளையும், பொது வார்டுல ஒண்ணா தான் தங்க வைச்சுருக்காவ வே...''இதனால, சந்தேக அடிப்படையில, பரிசோதனைக்கு வர்ற நபர்களுக்கு, 'நெகட்டிவ் ரிசல்ட்' வந்தாலும், அவங்களுக்கு, கொரோனா பரவ வாய்ப்பு இருக்கு... ''அதனால, 'பாசிட்டிவ் ரிசல்ட்' வந்த நபர்களை தனியாக தங்க வைக்கணுமுன்னு, பரிசோதனைக்கு வர்றவங்க சொல்லிருக்காவ வே...'' என விளக்கினார், அண்ணாச்சி.

''முதல்வர் மூக்கறுப்படறாப்ல, பெண் பிரமுகர் கேள்வி கேட்டுருக்காங்க ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.

''என்ன சொல்லுறீங்க...'' என, அதிர்ச்சியுடன் கேட்டார், அந்தோணிசாமி.

''ரெண்டு ஆண்டுக்கு முன், கேரளாவுல, மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த இளம் பெண்கள், தாலி அறுப்பு போராட்டம் நடத்தினா... இதுல, ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர், முகமது ரியாஸ் தலைமை வகிச்சார் ஓய்...''வேடிக்கை என்னான்னா, சமீபத்துல, கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவை, முகமது ரியாஸ் தான், மூணு முடிச்சு போட்டு, தாலி கட்டி, கல்யாணம் பண்ணியிருக்கார் ஓய்...'

'இதையடுத்து, தமிழக, பா.ஜ., மாநில ஊடக ஒருங்கிணைப்பாளரும், செய்தி வாசிப்பாளருமான சவுதாமணி, தன், 'டுவிட்டர்' பக்கத்துல, 'தாலி அறுப்பு போராட்டத்துக்கு, தலைமை தாங்கிய முகமது ரியாஸ், இப்போது தாலி கட்டினாரே... உங்கள் மகளுக்கு மட்டும், தாலி இருக்கணுமா...' என, கேள்வி எழுப்பிருக்காங்க ஓய்...

''இந்த பதிவு, சமூக வலைதளங்கள்ல, வேகமா பரவீண்டு இருக்கு ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''உள்ளாட்சி முறைகேட்டை விசாரிக்க, எப்போ, நடுவரை நியமிக்க போறாங்களோ...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், அந்தோணிசாமி.

''என்ன விஷயம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''தமிழக அரசு, 2014ல் கொண்டு வந்த, உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்றச் சட்டத்தின்படி, உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் முறைகேடுகளை விசாரிக்க, நடுவர் ஒருவரை நியமிக்க ஏற்பாடு செஞ்சாங்க...''அதன்படி, இந்த அமைப்பின் முதல் நடுவராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, சோ.அய்யரை நியமிச்சாங்க... இதுவரை, 800க்கும் மேற்பட்ட ஊழல் புகார்களை விசாரித்து, இந்த அமைப்பு நடவடிக்கை எடுத்துருக்குங்க...

''கடந்த பிப்ரவரியோட, சோ.அய்யரோட, மூணு ஆண்டு பதவிக்காலம் முடிஞ்சுருச்சு... அதுக்கு அப்புறம், அந்த பதவிக்கு யாரையும் நியமிக்காம இருக்காங்க...''புதிய நியமனத்துக்கான பேச்சுல, முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இடையில சுமுக முடிவு ஏற்படலை... ''அதனால தான், நடுவர் பதவி காலியா இருக்குன்னு, கோட்டை வட்டாரத்துல பேசிக்கிறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.நண்பர்கள் கிளம்ப, திண்ணை அமைதியானது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஜூன்-202010:32:15 IST Report Abuse
Kalyanaraman ஹி ஹிஹி...தொண்டனுக்கு ஒரு கொள்கை, தலைவன் குடும்பத்துக்கு ஒரு கொள்கை என்பதே இவர்களின் நிலையான கொள்கை. திராவிட, கம்யூனிச கொள்ளையர்களை நம்பி போகிறவர்களை இதைவிட யாராலும் அடிக்க முடியாது.
Rate this:
Cancel
Aaaaa - Bbbbbb,இந்தியா
29-ஜூன்-202009:57:47 IST Report Abuse
Aaaaa கவலைபடாதீர்கள் விரைவில் ஒரு அய்யரை மைய அரசு பரிந்துரைக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X