சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஜூன் 29, 2020
Share
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'காங்., ஆட்சி மத்தியில் போய், ஆறாண்டுகளுக்கு மேலாகிறது; இன்னமும் அவர்களை குறை சொல்வது நியாயம் தானா...' என, கேள்வி எழுப்பத் தோன்றும் வகையில், பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா பேட்டி: கொரோனா தடுப்பு நடவடிக்கையில், மத்திய அரசு தீவிரமாக செயல்படுகிறது. அரசின் அறிவுரையை கேட்டு, மக்கள் அதன்படி நடந்து கொள்ள வேண்டும். சீனா பிரச்னைக்கு, காங்., தான் காரணம். ஆனால், அதை பற்றி கவலையின்றி, சிதம்பரம் போன்றோர், பா.ஜ., அரசை குறை கூறுகின்றனர். அவர்களின் தேச துரோக செயல்கள் விரைவில் வெளிச்சத்திற்கு வரும்.


'இந்த வசனத்தை அப்பாவி காங்., தொண்டர்கள் கூட ஏற்க மாட்டாங்க...' என, பதிலடி கொடுக்கத் துாண்டும் வகையில், கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி பேட்டி: இந்திய ராணுவத்தை காங்., பிரதமர்கள், நேரு முதல், மன்மோகன் சிங் வரை, வலிமையாக கட்டமைத்துள்ளனர். ஆனால், இந்திய - சீன எல்லை பகுதிகளை, சீனா ஆக்கிரமித்துள்ளது. ஆனால், சீனாவை எதிர்கொள்ள வேண்டிய பிரதமர் மோடி, ஒளிந்து கொண்டிருக்கிறார்.


'சரி, இத்தனை முறை சீன ராணுவம் ஊடுருவியதை அறிந்த, காங்., ஏன் மவுனமாக இருந்தது; தடுக்க நடவடிக்கை மேற்கொண்டிருக்கலாமே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக, காங்., தலைவர் அழகிரி பேட்டி: கடந்த, 2010 - 2013ம் ஆண்டுகளில் சீன ராணுவம், 600 முறை ஊடுருவியதாக கூறினர். அதற்கு, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெளிவாக விளக்கம் தந்துள்ளார். தற்போது 2,263 முறை சீன ராணுவம் ஊடுருவியுள்ளதை மறந்து விட்டனர்.

'மார்ச் மாதத்திலிருந்து, இப்படித் தான் கூறி வருகிறீர்கள்; மக்கள் நம்பத் தயாராக இல்லை...' என, கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேச்சு: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது. நாள்தோறும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. உயிரிழப்பும் சராசரியாக நாளொன்றுக்கு, 50க்கு மேல் நடக்கின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்.

'இப்படி சொல்வதால், உங்கள் தலைவரின், 'குட்புக்'கில் வேண்டுமானால் நீங்கள் இடம் பெறலாம்; மக்கள் மனதில் இடம்பெற முடியாது...' என, கூறத் துாண்டும் வகையில், தி.மு.க., - எம்.எல்.ஏ., பொன்முடி பேட்டி: கொரோனாவை வைத்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்வதாக முதல்வர் கூறிஉள்ளார். 'கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்' என, செயல்படும் முதல்வருக்கு, ஸ்டாலினை குறை சொல்ல எந்த அருகதையும் இல்லை. முதல்வருக்கு கணக்கு தான் தெரியவில்லை என்றால், அரசியலும் தெரியவில்லை; நிர்வாகமும் தெரியவில்லை; புள்ளி விபரங்களும் தெரியவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X