ஐ.நா., உறுதிமொழி வாசகம்: இந்தியா, 5 நாடுகள் எதிர்ப்பு

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (3)
Advertisement
நியூயார்க்: ஐ.நா.வின் 75வது ஆண்டையொட்டி வடிவமைக்கப்பட்டுள்ள உறுதி மொழியின் வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள சில வாசகங்களுக்கு இந்தியா உள்பட ஆறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.ஐ.நா. சபையின் 75வது ஆண்டையொட்டி புதிய உறுதிமொழி வடிவமைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான வரைவு உறுதிமொழி மீது கருத்து தெரிவிக்கும்படி ஐ.நா. பொது சபையின் தலைவர் திஜானி முகமது பாண்டே கூறியிருந்தார்.
UN, 75th anniversary, India, UK, US, Australia, New Zealand, Canada

நியூயார்க்: ஐ.நா.வின் 75வது ஆண்டையொட்டி வடிவமைக்கப்பட்டுள்ள உறுதி மொழியின் வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள சில வாசகங்களுக்கு இந்தியா உள்பட ஆறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.



ஐ.நா. சபையின் 75வது ஆண்டையொட்டி புதிய உறுதிமொழி வடிவமைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான வரைவு உறுதிமொழி மீது கருத்து தெரிவிக்கும்படி ஐ.நா. பொது சபையின் தலைவர் திஜானி முகமது பாண்டே கூறியிருந்தார். 'இந்த உறுதிமொழிக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால் அது ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கருதப்படும்' என கூறப்பட்டிருந்தது.


latest tamil news


இந்த நிலையில் இந்தியா பிரிட்டன் அமெரிக்கா ஆஸ்திரேலியா நியூசிலாந்து கனடா ஆகியவை இந்த உறுதிமொழியின் சில வாசகங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.அந்த உறுதிமொழியின் இறுதியில் 'சிறந்த எதிர்காலம் என்ற நமது பொதுவான எண்ணத்தை அடைய இணைந்து செயல்படுவோம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை 'ஐ.நா. விதிகளின் முகப்புரையில் குறிப்பிட்டுள்ளதுபோல் சிறந்த எதிர்காலம் என்ற பொதுவான எண்ணத்தை அடைய இணைந்து செயல்படுவோம்' என மாற்ற வேண்டும் என ஆறு நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.

முதலில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகம் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதிமொழியில் உள்ள வாசகத்தை ஒத்திருப்பதாக கூறப்படுகிறது. அதனால் இந்த மாற்றத்தை செய்யும்படி இந்த ஆறு நாடுகளும் வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வாசங்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்த ஆறு நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே தற்போது வர்த்தகம் எல்லை பிரச்னை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
29-ஜூன்-202012:29:17 IST Report Abuse
NicoleThomson சீனா எனும் மாயை உடைய வேண்டும்
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
29-ஜூன்-202009:17:51 IST Report Abuse
Chandramoulli சீனாவிற்கு எதிராக நாடுகள் ஒன்று சேர ஆரம்பித்து விட்டன. புள்ளி வைக்கப்பட்டு விட்டது. இனிமேல் அந்த புள்ளியை எப்படி எடுத்து செல்லலாம் என்பது இவர்களுக்கு கைவந்த கலை.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
29-ஜூன்-202005:53:03 IST Report Abuse
blocked user சீனா அத்தனை நாடுகளுக்கும் உரிமை கொண்டாடப்போகிறது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X