பொது செய்தி

இந்தியா

வி.ஐ.பி.,க்கு கொரோனா: தமிழக அரசின் ரகசியம்

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
corona, Tamil Nadu, covid 19, coronavirus, தமிழகம், விஐபி, கொரோனா

புதுடில்லி: டில்லியில் உள்ள மத்திய சுகாதாரத் துறை, தினந்தோறும் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் கொரோனா தொடர்பான புள்ளி விபரங்களைப் பெற்று வருகிறது. சாதாரண பொது மக்களோடு, வி.ஐ.பி.,க்களுக்கு தொற்று ஏற்பட்டால், அதையும் மாநில அரசுகள், டில்லிக்கு தெரிவிக்க வேண்டும்.

தமிழக அமைச்சர் ஒருவருக்கு தொற்று என, 'மீடியா'வில் செய்தி வந்தது. ஆனால், தமிழக அரசு தரப்பிலிருந்து, இது தொடர்பாக எந்த விபரமும் டில்லிக்கு சொல்லப்படவில்லையாம். 'தமிழக அமைச்சர், கே.பி.அன்பழகனுக்கு தொற்று; அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்' என முதலில் செய்தி வந்தது. பத்திரிகையாளர்களிடம், 'ஆப் தி ரெக்கார்டு' ஆக, மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்ததாம். ஆனால், இது குறித்த தகவலை, தனியார் மருத்துவமனை, 'மெடிக்கல் புல்லடினாக' வெளியிடவில்லை. பிறகு, 'எனக்கு தொற்று கிடையாது' என, அமைச்சரே சொன்னார்.


latest tamil news



உண்மையில் நடந்தது என்ன என, டில்லி அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர். ஆனால், அரசு தரப்பில் இருந்தோ, மருத்துவமனையில் இருந்தோ எந்த அதிகாரபூர்வ தகவலும் கிடைக்கவில்லை. 'இது குறித்து யாரும் எதுவும் வெளியே சொல்ல வேண்டாம்' என, தமிழக அரசு, சம்பந்தப்பட்டவர்களை எச்சரித்துள்ளதாம். அதனால் தான், டில்லி அதிகாரிகளுக்கு எதுவும் தகவல் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PR Makudeswaran - Madras,இந்தியா
29-ஜூன்-202015:21:34 IST Report Abuse
PR Makudeswaran எதற்கெடுத்தாலும் அம்மாவின் அரசு என்று சொல்லியே.... ஒரு சமயம் ஜெ. ஆவி சொன்ன பிறகோ அல்லது ஆவியைக் கலந்து ஆலோசித்த பின்னரோ சொல்லுவார்கள் என நினைக்கலாம். கொரோனா அமைச்சருக்கோ வேறு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது.? மக்களின் சேவை செய்ததால் வந்தது என்று பெருமை பீற்றி கொள்ளலாம். சேவை செய்யவில்லை என்பது வேறு விஷயம்.
Rate this:
Cancel
arun - chennai,இந்தியா
29-ஜூன்-202013:21:18 IST Report Abuse
arun தினமலருக்கு தெரிந்தது டெல்லி க்கு தெரியவில்லை ... வாட்ஸாப்ப் இல் வரும் வீடியோ வை மாஜிஸ்திரேட் பாக்கவில்லை ... சிபிஐ ஐயும் பாக்காது ...
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
29-ஜூன்-202014:10:10 IST Report Abuse
s.rajagopalanஅன்பழகன் விஷயத்தையும் டில்லிக்கு சொல்ல வில்லயா ? ஒரு போராட்டத்திற்கு (வீட்டிற்குள் இருந்து கொண்டுதான் ) இது சான்ஸ் ஸ்டாலினுக்கு இருந்ததே ? ஒரு வேளை அவர்தான் வேண்டாம் என்று சொல்லியிருப்பாரோ ?...
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
29-ஜூன்-202013:11:31 IST Report Abuse
அசோக்ராஜ் பதவிக்கும் பணத்துக்கும் மட்டுமே கூட்டணியா? உருட்டுக்கும் ஊழலுக்கும் மட்டுமே கூட்டணியா? கொரோனாவுக்கு கூட்டணி இல்லையா? மறைத்து விடுகிறார்களா மாபாவிகள்?
Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
29-ஜூன்-202013:46:07 IST Report Abuse
Cheran Perumalநாட்டை விற்கவே சீனாவுடன் கூட்டணி வைத்திருக்கும் காங்கிரசுக்கும் அவர்களுடன் கூட்டணி வைத்திருப்பவர்களுக்கும் இது எவ்வளவோ மேல்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X