வி.ஐ.பி.,க்கு கொரோனா: தமிழக அரசின் ரகசியம்| TN's secret corona patient? | Dinamalar

பொது செய்தி

இந்தியா

வி.ஐ.பி.,க்கு கொரோனா: தமிழக அரசின் ரகசியம்

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (9)
Share
corona, Tamil Nadu, covid 19, coronavirus, தமிழகம், விஐபி, கொரோனா

புதுடில்லி: டில்லியில் உள்ள மத்திய சுகாதாரத் துறை, தினந்தோறும் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் கொரோனா தொடர்பான புள்ளி விபரங்களைப் பெற்று வருகிறது. சாதாரண பொது மக்களோடு, வி.ஐ.பி.,க்களுக்கு தொற்று ஏற்பட்டால், அதையும் மாநில அரசுகள், டில்லிக்கு தெரிவிக்க வேண்டும்.

தமிழக அமைச்சர் ஒருவருக்கு தொற்று என, 'மீடியா'வில் செய்தி வந்தது. ஆனால், தமிழக அரசு தரப்பிலிருந்து, இது தொடர்பாக எந்த விபரமும் டில்லிக்கு சொல்லப்படவில்லையாம். 'தமிழக அமைச்சர், கே.பி.அன்பழகனுக்கு தொற்று; அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்' என முதலில் செய்தி வந்தது. பத்திரிகையாளர்களிடம், 'ஆப் தி ரெக்கார்டு' ஆக, மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்ததாம். ஆனால், இது குறித்த தகவலை, தனியார் மருத்துவமனை, 'மெடிக்கல் புல்லடினாக' வெளியிடவில்லை. பிறகு, 'எனக்கு தொற்று கிடையாது' என, அமைச்சரே சொன்னார்.


latest tamil news



உண்மையில் நடந்தது என்ன என, டில்லி அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர். ஆனால், அரசு தரப்பில் இருந்தோ, மருத்துவமனையில் இருந்தோ எந்த அதிகாரபூர்வ தகவலும் கிடைக்கவில்லை. 'இது குறித்து யாரும் எதுவும் வெளியே சொல்ல வேண்டாம்' என, தமிழக அரசு, சம்பந்தப்பட்டவர்களை எச்சரித்துள்ளதாம். அதனால் தான், டில்லி அதிகாரிகளுக்கு எதுவும் தகவல் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X